உழைப்புக்கு கிடைத்த பரிசு.. மகனை பைலட்டாக்கிய எதிர்நீச்சல் நடிகை!
சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் கலக்கி வருபவர் தான் நடிகை பிரியதர்ஷினி. தொகுப்பாளினி டிடியின் அக்காவான இவர் நடிகையாக மட்டுமில்லாமல் நடனத்திலும் கைதேர்ந்தவராக இருக்கிறார். தற்போது இவர் தனது மகனை பைலட்டாக்கி தனது கனவை அடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை பிரியதர்ஷினி குழந்தை நட்சத்திரமாக பாக்கியராஜ் இயக்கிய தாவணிக்கனவுகள் திரைப்படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து ஒரு சில படத்தில் நடித்துள்ளார். பின் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விழுதுகள் சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து சீரியலில் தனது பயணத்தை தொடங்கினார். அதன்பின், ரேகா ஐபிஎஸ், எத்தனை மனிதர்கள், கோலங்கள் என அடுத்தடுத்து சீரியலில் நடித்து வந்தார் பிரியதர்ஷினி. இவர் சன் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்த போது எடிட்டராக இருந்த ராமகிஷோரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கிரிஷ் என்ற மகன் இருக்கிறார்.

நடிகை பிரியதர்ஷினி: தற்போது நடிகை பிரியதர்ஷினி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ரோணுகா என்கிற கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரின் நடிப்பும், பேசும் விதமும் மிகவும் இயல்பானதாக இருப்பதால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. அதுவும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இசை பிரியாவுடன் சேர்ந்து விட்டால், அந்த எபிசோடு கலகலப்பாக ரசிக்கும்படி இருக்கும்.
குவியும் வாழ்த்து: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியதர்ஷினி, தனது மகன் கிரிஷை பைலட்டாக்கி தனது கனவை அடைந்து உள்ளார். தனது மகன் மற்றும் கணவருடன் தனி ஹாலிகாப்டரில் ஜாலி ட்ரிப் சென்றுள்ளார். அந்த வீடியோவை பதிவிட்டுள்ள பிரியதர்ஷினி, உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் மகனே. உன்னோடு தனியாக பறக்குறேன். இந்த தருணத்தை நான் எப்பவும் மறக்கவே மாட்டேன் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் உழைப்புக்கு கிடைத்த பரிசு என பிரியதர்ஷினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இணையத்தில் இந்த வீடியோ டிராண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











