பூனம் பஜ்வா, கிரண் ரூட்டை பிடிக்கும் நடிகை ஹரிப்பிரியா இசை.. இன்ஸ்டாவில் கல்லா கட்ட புது பிளான்!

சென்னை: சீரியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாய்ப்புகள் குறையும் நேரங்களில் தங்களது பிரதான வருமானமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை மாற்றி வைத்துள்ளனர். குறிப்பாக, 'இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன்' என்ற புதிய வசதி மூலம் பல நடிகைகள் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் சீரியல் நடிகை ஒருவரும் இணைந்திருப்பது சோசியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சப்ஸ்கிரிப்ஷன் பிசினஸ்: இன்ஸ்டாகிராமில் சாதாரண ஃபாலோயர்கள் பார்க்க முடியாத சில பிரத்தியேக புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் லைவ் சாட்களை மாதக் கட்டணம் செலுத்தும் சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே காட்டும் வசதிதான் இந்த இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன். இதில், சினிமா நடிகையான நேஹா சர்மா, கிரண், பூனம் பஜ்வா, நந்திதா ஸ்வேதா மற்றும் பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலம் போன்ற பல முன்னணி கவர்ச்சிப் புயல்கள் இந்த முறையைப் பயன்படுத்தி பிஸியாக கல்லா கட்டி வருகின்றனர். இவர்கள் தங்கள் ரசிகர்களிடமிருந்து மாத சந்தாவாக ரூ.299 முதல் ரூ.499 வரை வசூலிக்கிறார்கள். இந்த கட்டணத்தை செலுத்தும் 'ப்ரைவேட்' ரசிகர்களுக்கு தினம் தினம் தங்களது அதீத கிளாமர் மற்றும் ஹாட் போட்டோஷூட் வீடியோக்களை வாரி வழங்கி இன்ஸ்டாகிராமையே சூடாக்கி வருகிறார்கள்.

Ethirneechal Haripriya Isai Subscription
Photo Credit:

ஹரிப்பிரியா இசை: கோதாவில் தான் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி என்ற எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழக இல்லத்தரசிகளின் மனதை வென்ற நடிகை ஹரிப்பிரியா இசை, குதித்துள்ளார். ஆனால், ஹரிப்பிரியாவின் பிளான் வேறுவிதமாக இருக்கு, மற்ற நடிகைகள் போல 300, 400 என்று பெரிய தொகையை நிர்ணயிக்காமல், மிகவும் குறைவாக மாத சந்தா வெறும் ரூ.45 மட்டுமே ஹரிப்பிரியா நிர்ணயம் செய்து இருக்கிறார். ஆரம்பத்தில் கம்மியான பட்ஜெட்டில் ஆரம்பிப்போம் என்ற முடிவா இல்லை இதில் கவர்ச்சிக்கு இடம் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறாரா என்று தெரியவில்லை.

இது உங்களுக்கு தேவையா?: பொதுவாகவே இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் வாங்கும் நடிகைகள், தங்களை பணம் கொடுத்து பார்க்கும் ரசிகர்களுக்கு 'லிமிட் இல்லாத கவர்ச்சி' காட்டுவதுதான் வழக்கம். இதனால், சப்ஸ்கிரிப்ஷன் நடிகைகள் என்றாலே கவர்ச்சி காட்டித்தான் சம்பாதிக்கிறார்கள் என்ற ஒரு முத்திரை குத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், குடும்பப் பெண்ணாக, சீரியல் நாயகியாக வலம் வரும் ஹரிப்பிரியா இசை இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உங்களுக்கு தேவையா?, நீங்களும் கவர்ச்சி காட்டப் போகிறீர்களா? என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X