Haripriya: எங்க நந்தினியை அடிச்சுக்க ஆளே இல்லை.. மல்கோவா மாம்பழ லுக்கில் ஹரிப்பிரியா!
சென்னை: சன் தொலைக்காட்சியின் பிளாக்பஸ்டர் தொடரான எதிர்நீச்சல் மற்றும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழக இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களின் நெஞ்சங்களில் 'நந்தினி' என்ற கதாபாத்திரமாகவே குடியேறியவர் நடிகை ஹரிப்பிரியா இசை. தனது எதார்த்தமான பேச்சினாலும், எமோஷனலான நடிப்பினாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
சின்னத்திரையில் ஆரம்பத்தில் ஒரு தொகுப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய ஹரிப்பிரியா, பின் 'EMI (தவணை முறை வாழ்க்கை)' என்ற தொடரின் மூலம் சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து பிரியமானவள், லட்சுமி வந்தாச்சு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, விதி உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களைக் காந்தம் போல இழுத்து வருகிறது.

மல்கோவா மாம்பழம் லுக்: டாப் ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த க்யூட் புகைப்படத்தில், பிரகாசமான மஞ்சள் நிற உடையில், நெற்றியில் க்யூட்டான குட்டிப் பொட்டு வைத்து, அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு தேவதை போலக் காட்சியளிக்கிறார் ஹரிப்பிரியா. கேமராவை நேராகப் பார்த்து அவர் கொடுத்திருக்கும் அந்த வசீகரமான புன்னகை ரசிகர்களைச் சுண்டியிழுக்கிறது. கண்ணத்தில் கைகளை வைத்துக் கொண்டு ஸ்டைலாகப் பார்த்த போஸும், அவரின் காந்த பார்வையும் ரசிகர்களை அப்படியே ஏக்க பெருமூச்சு விட வைக்கிறது. ஹரிப்பிரியாவின் இந்த ஆல்-இன்-ஒன் க்யூட் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், எங்க நந்தினியை அடிச்சுக்க ஆளே இல்லை என்றும், "மஞ்சள் நிறத்தில் அப்படியே மல்கோவா மாம்பழம் போல அட்டகாசமாக இருக்கிறீர்க என்றும் கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

சீரியல் பரபரப்பு: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது தர்ஷினியை காணவில்லை என ஒட்டுமொத்த குடும்படும் பறி தவித்து வருகிறது. இந்த நேரத்தை பயன்படுத்தி ராணா, குணசேகரன் குடும்பத்திற்குள் நுழைந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழிக்க திட்டமிட்டுள்ளார். எல்லா உண்மையும் தெரிந்த ஜனனி, சக்தி இரண்டு பேரும் வீட்டில் இல்லாத இந்த நேரத்தில் வீட்டிற்குள் அவர்களுக்கு எதிராக பெரும் சூழ்ச்சியே நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications