TRPயை ஆளும் சீரியல்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது டூ கார்த்திகை தீபம் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம்!
சென்னை: சினிமாவுக்கு இணையாக இன்று சின்னத்திரை சீரியல்களும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக Sun TV, Vijay TV, Zee tv போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்கள் தினசரி டிஆர்பி போட்டியில் கடும் போட்டியை உருவாக்குகின்றன. இதன் பின்னணியில், அந்த சீரியல்களை தாங்கி நிற்கும் கதாநாயகிகள் பெறும் சம்பளமும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக உள்ளது.
டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் சில பிரபல சீரியல் நடிகைகள் எபிசோடுக்கு பல ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர் என கூறப்படுகிறது. நீண்டநாள் ஓடும் ஹிட் தொடர்களில் நடிக்கும் முன்னணி நடிகைகள், தங்களது அனுபவம், ரசிகர் ஆதரவு, மற்றும் கதையின் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்ந்த சம்பளம் பேசப்படுகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது: அந்த வகையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் லீட் ரோலில் நடித்து வருபவர் தான் பார்வதி. பெண்களை அடிமையாக்கி அவர்களை முன்னேற விடாமல் தடுக்கும் குணசேகரின் எண்ணத்திற்கு ஆப்பு வைத்து, தமிழ்சோறு என்று புட் டிரக்கை தொடங்கினார். தற்போது ஜனனி பெரிய பிரச்சனையில் சிக்கி இருப்பது போல கதை சென்று கொண்டு இருக்கிறது. இதில், ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் VJ பார்வதி ரூ. 13,000 முதல் ரூ 15,000 வரை தினம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் : விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி என்ற கதாபாத்திரத்தில் நடிகை நிரோஷா நடித்து வருகிறார். சரவணன் மற்றும் அஞ்சலி இருவரும் தங்களது மொபைல் நம்பரை ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்டு பேச தொடங்கியிருக்கின்றனர். இந்த சீரியல் சூடுபிடித்து இருக்கும் நிலையில் இதில் முக்கிய ரோலில் நடித்து வரும் நிரோஷாவிற்கு ஒரு நாளைக்கு சுமார் ₹18,000 முதல் ₹20,000 வரை சம்பளம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அய்யனார் துணை: அதே போல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'அய்யனார் துணை' இந்த தொடரில் தற்போது வீட்டை புதுப்பிக்கும் வேலையை செய்கின்றனர். ஆனால், நீதிமன்றம் உத்தரவை காட்டி தற்போது, அய்யனார் துணை வீட்டிற்கு சீல் வைத்துவிட்டனர். இதனால் நிலா, பாண்டியன், சேரன் என மொத்த குடும்பமும் தற்போது வீட்டிலிருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வரும் மதுமிதாவிற்கு ஒரு நாளைக்கு ரூ,15 ஆயிரத்தில் இருந்து ரூ 18 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்திகை தீபம்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம் இந்த சீரியல் கார்த்திக் ராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதில், அவருக்கு ஜோடியாக வைஷ்ணவி சதீஷ் நடித்துள்ளார். மலையாள நடிகையான இவர் மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான நிலையில் தற்போது இவர், கார்த்திகை தீபம் சீரியல் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். வைஷ்ணவிக்கு இது முதல் சீரியல் என்றாலும் இந்த சீரியல் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது. இந்த சீரியலில் ரேவதி கதாபாத்திரத்தில் நடிக்கும் இவருக்கு ரூ 15 ஆயிரம் முதல் ரூ 18 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











