Summer Special : எதிர்நீச்சல் ஜான்சி ராணியா இது? இப்படி மாறிட்டாங்களா? காயத்ரியின் கில்லர் போஸ்!
சென்னை: சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகை காயத்ரி, 'எதிர்நீச்சல்' சீரியலில் ஜான்சி ராணி கதாபாத்திரம் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர். அந்த கதாபாத்திரத்தில் அவர் காட்டிய தனித்துவமான நடிப்பு, வசன உச்சரிப்பு, கம்பீரமான உடல்மொழி என பல அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதனால் இன்றும் பலரும் அவரை 'ஜான்சி ராணி' என்றே அழைத்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் தொடர்ந்து பல சீரியல்களில் பிஸியாக இருக்கும் காயத்ரி, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள், படப்பிடிப்பு தருணங்கள், பயண அனுபவங்கள் ஆகியவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புதிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை காயத்ரி: கடற்கரை ரிசார்ட்டில் வெயில், காற்று, இயற்கை சூழலை ரசிக்கும் விதமாக காயத்ரி எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிங்க் கலர் கோ-ஆர்ட் உடையில் செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள அவர், மினிமல் லுக்கிலேயே கிளாஸியான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி எடுத்த candid புகைப்படம் முதல், கடலை பின்னணியாக கொண்டு எடுத்த ஸ்டைலிஷ் போஸ்கள் வரை ஒவ்வொரு புகைப்படமும் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
குவியும் லைக்குகள்: "ஜான்சி ராணியா இது?", "செம்ம ஸ்டைலிஷ் லுக்", "காயத்ரி கிளாமரில் கலக்குறாங்க" என ரசிகர்கள் கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர். சின்னத்திரையில் மாஸ் கதாபாத்திரங்களில் பார்க்கப்பட்ட காயத்ரியை இப்படி மாடர்ன் லுக்கில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஸ்டைலிஸ் லுக்: சீரியல் உலகைத் தாண்டி தற்போது சினிமாவிலும் காயத்ரி கவனம் செலுத்தி வருகிறார். 'காதலிக்க நேரம் இல்லை', 'குடும்பஸ்தன்', 'ஒத்த ஓட்டு முத்தையா', 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பர்' உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் தனது இடத்தை வலுப்படுத்தி வருகிறார். நடிப்பில் மட்டுமல்லாமல், தனது ஸ்டைல் சென்ஸ் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வரும் காயத்ரியின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications