பிடிக்காத உறவு.. கணவரை பிரிய இதுதான் காரணமா? மனம் திறந்த சீரியல் நடிகை!

சென்னை: சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை ஹரிப்ரியா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், எதிர்நீச்சல் சீரியலில், நந்தினி கேரக்டரில் நடித்து வரும் இவர், இந்த தொடரின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். இவர், தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் பிரபலமாக இருந்து வருகின்றனர். இதில் ஆதிமுத்து குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அண்மையில் உயிரிழந்தார். தற்போது அந்த கதாபாத்திரத்தில், நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.

Ethirneechal serial actress haripriya interview about divorce

இந்த சீரியலில், பிரியதர்ஷினி, மதுமிதா ஆகியோர் குணசேகரனின் மருமகள்களாக நடித்து வருகின்றனர். இதில், குணசேகரன் குடும்பத்தின் மூன்றாவது மருமகளான நந்தினி கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை ஹரிப்ரியா இசை. இவர், 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் திடீரென்று விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ஹரிப்ரியா பேட்டி: அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை, ஹரிப்ரியா இசை, அதில் தனிமை தான் என் நண்பன், எப்போதும் தனியாக இருப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன். ஒரு நாள் முழுவதும் என்னை தனியாக விட்டாலும், அந்த நாளில் தனியாக பாட்டு கேட்டுக்கொண்டு, புத்தகம் படித்துக்கொண்டு இருப்பேன். அதற்காக என்னுடன் யாரும் இருப்பதை விரும்பவில்லை என்று அர்த்தம் இல்லை. அந்த தனிமையான நேரத்தில் தான் நான் என்னை உணர்கிறேன் என்றார்.

பிடிக்காத உறவு: மேலும், வாழ்க்கையில் கசப்பான மனிதர்களை சந்திக்கும் சூழ்நிலை வரும், அது அனைவருக்கும் வரும் மோசமான வாழ்க்கை, பிடிக்காத உறவு என அமையும். அதை தாண்டி தான் வந்தாக வேண்டும். இனிமேலும் வரும் யாருக்கு தெரியும். அதை நாம் கடந்து நகர்ந்து செல்லவேண்டும், அதை கடந்து வரும் என மிகுந்த மன தைரியத்தோடு நாம் இருக்க வேண்டும் என்றார். எதிர்நீச்சல் சீரியலில் வருவது போல, குணசேகரன், கதிர் கதாபாத்திரம் போல நிஜ வாழ்க்கையிலும் பல பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் தாண்டித்தான் பெண்கள் வெளியில் வரவேண்டும். இது போன்ற நபர்கள் இருப்பதால் தான் நம்ம வாழ்க்கையில் நாம் எதையாவது செய்ய வேண்டும்.

இதுதான் உண்மையான சம உரிமை: பெண்கள் ஆண்களுக்கு பெண் சமம் தான் நான் என் இஷ்டத்திற்கு எதையாவது செய்வேன் என்று ஏட்டிக்கு போட்டியாக எதையும் செய்யாமல், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எனக்கு பிடித்ததை செய்யும் உரிமையைத் தான் நான் உண்மையான சம உரிமையாக பார்க்கிறேன் என்று அந்த பேட்டியில் நடிகை ஹரிப்ரியா தெளிவாக பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X