Ethirneechal: நந்தினி செய்த செயல்..ஆதிரை கழுத்தில் மறுபடியும் தாலி கட்டும் அருண்.. லீக்கான வீடியோ

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு ஆதிரைக்கு கரிகாலன் நடு ரோட்டில் வைத்து தாலி கட்டி இருப்பார்.

இந்த நிலையில் ஆதிரை தற்போது தனக்கும் அருணுக்கும் திருமண முடிந்தது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Ethirneechal Serial Adhirai is currently releasing a video as if his and Aruns marriage is over

தற்போது இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் அமோகமான வரவேற்பு இருக்கிறது. இந்த சீரியல் சன் டிவியில் மட்டுமல்லாமல் சன் நெக்ஸ்ட் மூலமாகவும் அதிகமான ரசிகர்கள் தொடர்ச்சியாக பார்த்து வருகின்றனர். பொதுவாக சீரியல்கள் என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும் தான் பார்ப்பார்கள்.

ஆனால் இந்த சீரியலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பு ஆதரவு இருக்கிறது. அதிலும் கல்லூரி பருவத்தில் இருப்பவர்களின் மத்தியிலும் இந்த சீரியல் குறித்து பேசப்பட்டு வருகிறது. காரணம் இந்த சீரியலின் கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளும் தான். திரைப்படங்களுக்கு இணையாக காட்சி அமைப்பு வேகம் எடுத்து சென்று கொண்டிருப்பதாலே சீரியல் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்களால் மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் நடிப்பவர்களாலும் கூட யூகிக்க முடியாத வகையில் இருக்கிறது. அந்த வகையில்தான் ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் கூட நடைபெற்றது. ஆரம்பத்தில் ஆதிரைக்கும் அருணுக்கும் எப்படியும் வீட்டு பெண்கள் திருமணத்தை நடத்தி முடித்து விடுவார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் அருணுக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது. ஆனால் இப்ப வரைக்கும் அது எப்படி நடந்தது யாரால் நடந்தது என்பது வெளியே தெரியாத ரகசியமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அருண் கோவிலுக்கு குறித்த நேரத்திற்குள் வராததால் அந்த இடத்திற்கு கரிகாலனோடு வந்த குணசேகரன் ஆதிரையை இழுத்துட்டு வந்து நடு ரோட்டில் வைத்து கரிகாலனை வைத்து தாலி கட்டி விட்டார்.

அந்த தாலியை மதிக்காமல் ஆதிரை கழட்டி தூக்கி வீசி இருந்தாலும் இப்போதும் கரிகாலனின் மனைவியாக தான் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ஆதிரையாக நடிக்கும் சத்தியா தேவராஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில்

ஆதிரை கழுத்தில் அருண் தாலி கட்டுவது போன்று இருக்கிறது. அப்போது அங்கு நந்தினி, ரேணுகா ஜனனி எல்லோரும் பூவெடுத்து போட்டு ஆசீர்வாதமும் செய்கின்றனர்.

இப்படி இருக்கும் நிலையில் அந்த வீடியோவில் நான் ஆசைப்பட்டது அருணோடு திருமணம் ஆனால் நடந்தது கரிகாலனோடு திருமணம் என்கிற மாதிரி வீடியோ எடிட் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு என் வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்டியேப்பா என்று நடிகர் மாரிமுத்து டேக் செய்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதே நேரத்தில் இனியும் இப்படியும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? கேள்விகளும் குவிகிறது. அதே நேரத்தில் அருண் ஆதிரைக்கு தாலி கட்டுவது போன்ற காட்சிகள் டிவியிலும் வரவில்லை. ப்ரோமோவிலும் வரவில்லை. ஆனால் எதற்காக இந்த காட்சிகள் மட்டும் படமாக்கினார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஒருவேளை கடைசி நேரத்தில் கதையை மாற்றி கரிகாலன் தாலி கட்ட வைத்து விட்டார்களா? என்றும் கேள்விகள் வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X