எதிர்நீச்சல் இயக்குநர் வீட்டில் விசேஷம்.. மகிழ்ச்சியில் நடிகர்கள்.. என்னனு தெரியுமா?
சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வரும் திருச்செல்வம் வீட்டில் விசேஷம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான வேலையில் திருசெல்வம் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம்.
எதிர்நீச்சல் சீரியலை இயக்கி இப்போது பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்திருக்கும் திருச்செல்வத்தின் சொந்த ஊர் தஞ்சாவூர், இவரது குடும்பமே ஒரு விவசாய குடும்பம் என்பதால், இவருக்கும் சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சினிமா மீது இருந்த ஆசையால், இவர் சென்னை வந்தார். ஒரு சில திரைப்படங்களுக்கு சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார்.

இயக்குநர் திருசெல்வம்: இவர் 2002ம் ஆண்டு சன் டிவியில் மெட்டி ஒலி தொடரின் இணை இயக்குனராக பணியாற்றினார். அதன்பிறகு திருச்செல்வம் இயக்குனராக கோலங்கள் என்ற தொடர் மூலம் அறிமுகமானார். இதில் தேவயானி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த தொடர் மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்தது, இந்த தொடருக்காக பல விருதுகளையும் அவர் வாங்கி இருக்கிறார். அதன்பின் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கினார்.
எதிர்நீச்சல்: பல தொடர்களை இயக்கி திறமையான இயக்குநர் என்று பெயர் எடுத்த இவர், தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். இத்தொடர் சன் தொலைக்காட்சியில் 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆணாதிக்கம் நிறைந்த வீட்டில் உள்ள ஆண்களை திருமணம் செய்துகொண்டு செல்லும் பெண்களை மையப்படுத்தியும், அந்த வீட்டில் பிறந்த பெண்களை மையப்படுத்தியும் எதிர்நீச்சல் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
முடிகிறதா: டிஆர்பியில் முதல் இடம் பிடித்த இந்த தொடர் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து இறந்ததற்கு அந்த கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்தார். ஆனால் அதுவரைக்கும் ஆதி குணசேகரன் இருந்த கேரக்டர், வேலராம மூர்த்திக்கு வித்தியாசமாக இருந்ததால் டிஆர்பியில் சற்று சறுக்கல் ஏற்பட்டது. இந்த சீரியல் வரும் ஜூலை எட்டாம் தேதியோடு முடிவுக்கு வரும் என்று தகவல்கள் பரவி வருகிறது. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை
வீட்ல விசேஷம்: இந்நிலையில், இந்த தொடரின் இயக்குநர் திருசெல்வத்தின் வீட்டில் விசேஷம் நடைபெற உள்ளது. அதாவது திருசெல்வத்தின் மகள் பிரியவர்ஷினிக்கும் ஹரிக்குமார் என்பவருக்கும் அடுத்த மாதம் 10ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இயக்குநர் மும்முரமமாக ஈடுபட்டு வருகிறார். இல்லரவாழ்க்கையில் இணையும் திருசெல்வத்தின் மகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











