விஜய்யை தடுக்காதீங்க… அது ஜனநாயகம் இல்லை.. திருசெல்வம் அதிரடி!

சென்னை: நடிகரும் இயக்குநருமான திருசெல்வம் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்க்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும், பெருவாரியான மக்கள் அவரை தேர்ந்தெடுத்து இருக்கும் போது, அவரைத் தடுப்பது என்பது ஜனநாயக மரபு இல்லை என பேசி உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக்கழகம், ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் முழுமையான ஆதரவை இன்னும் பெறாத சூழலில் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மேலும் சில உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்காக விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Ethirneechal Vijay
Photo Credit:

இயக்குநர் திருசெல்வம்: இந்த சூழலில், விஜய் தமிழ்நாடு ஆளுநரை இரண்டு முறை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார். ஆட்சி அமைத்த பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கிறோம் என்று தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால்,ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்புவிடுக்காததால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் இயக்குநர் திருசெல்வம் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

மக்களின் விருப்பம்: அதில், இன்றைய அரசியல் சூழ்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தனித்துவமாக 108 தொகுதிகளுடன் வெற்றி பெற்றிருக்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். நமக்கு பிடிக்கலாம், பிடிக்காமல் இருக்கலாம், கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம் இவை அனைத்தும் தேர்தலுக்கு முன் பேசப்பட்டவை. ஆனால், கள அனுபவம் இல்லையென்றாலும் பரவாயில்லை, அவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் தீர்மானித்து விஜய்யை தேர்ந்தெடுத்துவிட்டார்கள்.

ஜனநாயக மரபு இல்லை: இப்போது அவரைத் தடுப்பது என்பது ஜனநாயக மரபு இல்லை. அது உண்மையான ஜனநாயகமும் இல்ல. அதிகாரத்தை கொண்ட அதை தடுப்பது தவறு. அவர் தன்னுடைய செல்வாக்கை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும். அதற்கான காலத்தையும், அவகாசத்தையும் அவருக்கு வழங்க வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். பெரும்பான்மையான மக்கள் அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர் குறைபாடுகளுடன் ஆட்சி நடத்தினால் விமர்சனம் செய்யலாம். அடுத்த தேர்தலில் மக்கள் அதற்கான தீர்ப்பை அவருக்கு வழங்குவார்கள். வெற்றி பெற்றவருக்கு தோல்வி வழங்கப்படுவது ஜனநாயகம் ஆகாது என பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X