ஜாலியா ட்ரிப் போன எதிர்நீச்சல் தொடர்கிறது டீம்.. எங்க தெரியுமா?
சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அனைவருக்கு பிடித்து தொடராக இருக்கிறது. இந்த சீரியல் பரபரப்பான கட்டத்தில் இருக்கும் நிலையில், அந்த சீரியல் நடித்த அனைவரும் ஜாலியாக சுற்றுலா சென்றுள்ள போட்டோ வெளியாகி உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த தொடரில் தற்போது ஜனனி கர்ப்பமாக இருப்பது, ஈஸ்வரி கோமாவில் இருந்து மீண்டு வந்தது என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. கோமாவில் இருக்கும் ஈஸ்வரியும் மீண்டு வந்தது, குணசேகரன் தான் என்னை அடிச்சாரு, என்னோட இந்த நிலைமைக்கு காரணம் ஆதி குணசேகரன் தான் என ஈஸ்வரி சொல்லுவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நேரத்தில் மருத்துவர் இப்போது ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அதாவது ஈஸ்வரிக்கு கடந்த ரெண்டு வருஷத்துல நடந்த அத்தனை விஷயத்தையும் மறந்துவிட்டார். அந்த விஷயத்தை யாரும் ஞாபகப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம். அப்படி முயற்சி செய்தால், ஈஸ்வரியின் மூளை பாதிக்கப்படும் என சொல்கிறார். அந்த விஷயம் தெரிந்த குணசேகரன், கதிர், ஞானம் என அனைவரும் ஹாப்பியாக இருக்கின்றனர். ஆனால், மூன்று மருமகள்களும், குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்ப முடியாத வேதனையில் இருக்கின்றனர்.

ஜாலி ட்ரிப்: இப்படி சீரியல் விறுவிறுப்பாக அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் இந்த நேரத்தில், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நடித்த விபு, தேவதர்ஷினி, இசைப்பிரியா, பார்வதி என அனைவருமே ஜாலியாக சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எடுத்து கொண்ட புகைப்படத்தை நடிகர் விபு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த சீரியல் பிரியர்கள் சீரியலில் எலியும், பூனையுமாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில அனைவரும் இப்படி ஒத்துமையாக ஜாலியாக இருப்பதை பார்க்கவே சந்தோஷமா இருக்கு என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











