கப்சுப்பான குணசேகரன்.. கிட்னி திருட்டுக்கு மாறிய கதை.. சொதப்பும் எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், ரகசியத்தை கண்டுப்பிடித்த ஜனனியை தேவசகாயம் அடித்து அறையில் அடைக்கிறார். அப்போது, இந்த வீட்டுக்கு வந்ததை நீ தீர்மானிக்கவில்லை, போவதையும் நீ தீர்மானிக்க முடியாது. நீ வெளியில் போனா பிரச்சனை வரும்னு எத்தனை வாட்டி சொல்வது, உன்னை தேடி வரும் ஆட்களால் மட்டுமில்லை, இன்னும் சில ஆட்களாளும் உனக்கு பிரச்சனை வரும். வெளியில் ஒரு கூட்டமே காத்துக்கிட்டு இருக்கு, சொன்னா உன்னை குதறி விடுவாங்க, ஒழுங்க நான் சொல்வதை கேட்டு இந்த வீட்டுக்குள் இரு, இல்லை என்றால் நடப்பதே வேறு என்று ஜனனியை மிரட்டுகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, இன்றைய எபிசோடில், ஜனனி ஒரு அறையில் மயங்கிய நிலையில் இருக்க, ஜூஸ் கொடுக்க வந்த வசந்தா என்ற பணி பெண் வாக்கி டாக்கியை ஜனனியின் அறையில் மறந்து வைத்து விட்டு சென்று விடுகிறாள். அந்த வாக்கி டாக்கியில், தேவ சகாயம் ஒரு மருத்துவரிடம் ஜெர்மனிக்கு இன்று ஒரு பெண்ணின் உடல் உறுப்புகளை அனுப்ப வேண்டியது இருக்கிறது. அந்த பெண் தயாராக இருக்கிறாள் அவளுக்கு இன்று ஆப்ரேஷன் செய்துவிடலாம்.

ஜனனிக்கு தெரியவந்த உண்மை: அதேபோல ஜனனியின் ரத்த வகைக்கு ஏற்றபடி ஏதாவது உடல் உறுப்பு தேவை இருந்தால் சொல்லவும். அதற்காகத்தான் இங்கு ஜனனியை வைத்துக் இருக்கிறேன். அவரது ஆர்கன்ஸ் அனைத்தும் சீராக இருக்கிறது அதற்கான மாத்திரைகளை நான் கொடுத்து வருகிறேன். கிட்னி, லிவர் இரண்டையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என சொல்கிறார். இப்படி தேவசகாயம் பேசிக்கொண்டு இருப்பதை அறைக்குள் இருந்த வாக்கி டாக்கி மூலம் ஜனனி கேட்டு கதறி அழுகிறாள். இப்படி ஒரு மோசமான இடத்தில் நாம் மாட்டிக்கொண்டேமே இதற்கு மேலும், நாம் அமைதியாக இருந்தால் சாக வேண்டியது தான், எப்படியாவது இங்கிருந்து தப்பி செல்ல வேண்டும் அதற்கான தைரியத்தை எனக்கு கொடு என இறைவனிடம் வேண்டுகிறாள்.
மயங்கிய விசாலாட்சி: மறுபக்கத்தில் வீட்டில் இருக்கும் கதிர், ஞானம் இருவரும் ரேணுகா மற்றும் நந்தினியிடம் குழந்தைகளை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிடுங்கள் என சொல்கின்றனர். அப்போது ரேணுகா என் குழந்தைக்கு எத்தனை வயது என்று கூட உனக்கு தெரியாது அப்படி இருக்கும்போது எப்படி உன்னிடம் என் மகளை ஒப்படைப்பேன் என இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. அப்போது நந்தினி, கதிரிடம் உனக்கும் புள்ள வேணுமா... நீயும் அறிவுகரசியும் சேர்த்து பெத்துக்கோங்க என சொல்ல, ஆத்திரப்படும் கதிர் நந்தினியை அடிக்கிறார். தடுப்பதற்காக விசாலாட்சி வர அந்த நேரம் அவருக்கு மயக்கம் ஏற்பட்டு சரிந்து விழுகிறாள். எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் குடும்ப கதையாக சென்று கொண்டு இருந்தது, இப்போது குணசேகரன் என்ன செய்கிறார் என்று தெரியாத அளவிற்கு சீரியலில் குணசேகரன் அமைதியாக இருக்கிறார். ஆனால், புது வில்லனாக வந்த தேவசகாயம் கிட்னி திருடுபவராக இருக்கிறார். கதை மாற்றப்பட்டு சென்று கொண்டு இருக்கிறது. குடும்ப கதையாக சென்று கொண்டு இருந்த எதிர்நீச்சல் சீரியல் இப்போது தடம் மாறி கிட்னி திருட்டு கதையாக சென்று கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











