எதிர்நீச்சல் ஈஸ்வரியாக களமிறங்கும் டாப் சீரியல் நடிகை.. கனிகாவிற்கு பதில் இவர்!

சென்னை: ஆதி முத்து குடும்பத்தின் வாரிசை ஜனனி சுமந்து கொண்டு இருக்கும் நிலையில் ஜனனி அழிப்பதற்காக வீட்டில் பூஜையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சீரியல் மீண்டும் சூடுபிடித்து இருக்கும் நிலையில், ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கனிகாவிற்கு பதில் டாப் சீரியல் நடிகை ஒருவர் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்த சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இதன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்தர சில மாதமாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கனிகா, குணசேகரன் அடித்ததால், தலையில் அடிபட்டு மருத்துவமனையில் கோமாவில் இருப்பதாக கதையை நகர்த்தி வருகின்றனர். இதையடுத்து, கடந்த சில வாரத்திற்கு முன், ஈஸ்வரி கோமா நிலையில் இருந்து மீண்டுவிட்டார். அவர் இன்னும் இரண்டு நாளில் வீட்டுக்கு போகலாம் மருத்துவர் சொல்ல அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

ethirneechal thodargirathu Kaniha sreeja
Photo Credit:

கனிகாவிற்கு பதில் இவரா?: இதனால், ஈஸ்வரி கதாபாத்திரத்தில் யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதில், தேவயானி வரப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அந்த கதாபாத்திரத்தில் பொம்மலாட்டம் சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை ஸ்ரீஜா, இனி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில நாட்களில் இவரின் எபிசோட் வெளியாக உள்ளதாக உள்ளது.

விலக காரணம்: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் சிறப்பாக நடித்து வந்த கனிகா, தனது மகன் ரிஷி, பத்தாம் வகுப்பு படித்து வருவதால், ,இந்த நேரத்தில் அவனுடன் நான் இருக்க வேண்டும் என விரும்பினேன். இதற்காக தான் நான் சீரியலில் இருந்து விலகினேன். இது குறித்து இயக்குனரிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இதனால், இது திடீரென எடுத்த முடிவு கிடையாது. நான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன் என சேனலுக்கும் தெரியும், இயக்குனருக்கும் தெரியும், சக நடிகர்களுக்கும் தெரியும் என நடிகை கனிகா அண்மையில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X