Diya Menon: குணசேகருக்கு ஆப்பு வைக்கும் மதிவதனி.. தாய்லாந்தில் போட்ட ஆட்டத்தை பாருங்க!

சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கலெக்டர் மதிவதனியாக நடித்து வருபவர் தான் தியா மேனன். இவரைப் பார்த்து குணசேகரனே பயந்து நடுங்கும் நிலையில் தற்போது தியா மேனன் தனது குடும்பத்துடன் ஜாலியாக தாய்லாந்துக்கு டூர் சென்றுள்ளார். அந்த போட்டோவை தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இத்தனை நாட்களாக கோமாவில் இருந்த ஈஸ்வரி மீண்டு வந்து இருக்கிறார். ஆனால் அவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த எல்லா விஷயங்களும் மறந்து விட்டதால் அதை வைத்து குணசேகரன் அழகாக காய்களை நகர்த்தி வருகிறார். இதே நேரம் ஜனனி குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறி கலெக்டர் மதிவதனியுடன் கூட்டு சேர்ந்து எப்படியாவது குணசேகரன் செய்த கொடுமையை வெளியில் கொண்டு வந்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என முழு முயற்சியாக இருக்கிறார்.

ethirneechal thodargirathu Sun tv actress
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இப்படி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் குணசேகரனே கலெக்டர் மதிவதனி என்ன செய்வாரோ என்ற பயத்தில் இருக்கும்போது நடிகை தியா மேனன் தனது குடும்பத்துடன் ஜாலியாக தாய்லாந்துக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நீச்சல் குளத்தில் குதூகலமாக ஆட்டம் போட்டு இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ethirneechal thodargirathu Sun tv actress
Photo Credit:

நடிகை தியா மேனன்: கோயம்புத்தூரை சேர்ந்த தியா மேனன் 12வது படித்துக் கொண்டு இருக்கும் போதே, உள்ளூர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதைத்தொடர்ந்து சன் மீயூசிக் சேனலில் தொகுப்பாளரான இவர், கிரேஸி கண்மணி, கால் மேல காசு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாள சேனல்களிலும் தொகுப்பாளராக பணியாற்றி வந்த தியா மேனன். சிங்கப்பூரை சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடிப்பை கைவிடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்களை வைத்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X