காதல் பாடல்களின் மன்னன்.. பி.பி.ஸ்ரீனிவாஸ்

By Mayura Akilan

P B Srinivas
ரோஜா மலரே ராஜகுமாரி... காலங்களில் அவள் வசந்தம்.... என காலத்தால் அழியாத பாடல்களை பாடி நாற்பது ஆண்டுகாலமாக இசை உலகில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்திருப்பவர் திரை இசை பின்னணிப் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ். அவரது தன்னுடைய கடந்தகால வாழ்க்கையைப் பற்றி சன் டிவியின் பாட்டு தர்பார் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

காதல் மன்னன் ஜெமினிகணேசனுக்கு அதிக அளவில் பாடல்களை பாடியுள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ், காதல் என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் மனித வாழ்க்கையே வீண் என்று கூறினார். அதனால்தான் காலத்தால் அழியாத பல பாடல்களை தன்னால் பாட முடிந்தது என்று கூறினார்.

'காலங்களில் அவள் வசந்தம்' .... என்ற பாடல்தான் தன்னுடைய வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்திய பாடல் என்று கூறிய அவர் தனது எவர்கிரீன் பாடல்களை இன்றைக்கும் மாறாத காதலோ பாடிக்காட்டினார். இசைப்பயணத்தில் தனக்கு உதவி செய்தவர்களை தினந்தோறும் நினைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக கூறினார். ஏற்றிவிட்ட ஏணிப்படிகளை தான் என்றைக்கும் மறப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

பிளாக் அன்ட் ஒயிட் சினிமா காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, போன்ற ஜாம்பவான் நடிகர்களுக்கு பாடிய அவர் அதிகம் பாடியது ஜெமினிகாணேசனுக்குத்தான். ஜெமினிகணேசன் படம் என்றாலே பி.வி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்கள்தான் இடம் பெற்றிருக்கும்.

சட்டைப்பாக்கெட்டில் வரிசையாய் பேனாக்களை வைத்திருந்த ஸ்ரீனிவாஸ் அவர்கள் அதற்கு சொன்ன விளக்கம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது பிபிஎஸ் ( PBS) என்று என்னை சுருக்கமாக கூப்பிடுவார்கள். அதற்கு பிளேபேக் சிங்கர் என்று ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் நான் pens, books, stocks என்று ஒரு அர்த்தம் கூறுவேன் என்று தெரிவித்தார். அந்த அளவிற்கு பேனாக்களின் மீது புத்தகங்களின் மீதும் தனக்குள்ள நேசத்தை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சி வரும் வாரமும் ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த வாரம் சன் டிவியில் அந்த நிகழ்ச்சியை தவறவிட்டவர்கள் இன்றைக்கு இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில் ஆட்டோகிராப் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை சந்திக்க வருகிறார் மெல்லிசை பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ். இசை ரசிகர்கள் மறக்காமல் கண்டு ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X