Arundhathi serial: சீரியல்களில் இப்போது முருகன் கடவுளுக்கு உகந்த நேரம் அரோகரா!

சென்னை: சன் டிவி சீரியல்களில் இப்போது வெள்ளிக் கிழமை செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு விரதம் இருப்பது, பால் குடம் சுமப்பது, காவடி தூக்குவது என்று ஒரே முருகன் பக்தி கோலாகல கொண்டாட்டமாக உள்ளது.

மாலை தமிழ்செல்வி சீரியல், இரவு கண்மணி, ரோஜா, அருந்ததி சீரியல்கள் என்று பல சீரியல்களில் முருகனுக்குத்தான் வேண்டுதல் வைத்து நிறைவேற்றுகிறார்கள்.

தமிழ் கடவுள் முருகனுக்கு என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் அங்கங்கு என்று முருகன் கோயில் கட்டி வழிபட்டு கொண்டு இருக்க, நமது கடவுளின் பெருமையை நாமும் நம்மால் முடிந்த அளவு பறைசாற்ற வேண்டாமா?

முருகன் வள்ளி

முருகன் வள்ளி

இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் கண்மணி சீரியலில், வீட்டு பெண் சவுந்தர்யாவுக்கு திருமணம் தள்ளி தள்ளிப் போக சாமிகிட்ட போய் குறி கேட்கிறார்கள். அப்போது சாமி குறி சொல்வதில் முருகன் வள்ளித் திருக்கல்யாணம் நடத்தி வைக்க வேண்டும். முருகன் வள்ளி திருமணத்தை கூத்தாக நடத்த வேண்டும் என்று குறி சொல்கிறார்கள். அந்த வாக்கின் படி முருகன் வள்ளிக்கு திருக் கலயாணமும், வள்ளி, முருகன் கல்யாண கூத்தும் நடத்துவது பார்க்க பரவசமாக இருந்தது.

மாலை தமிழ்செல்வி

மாலை தமிழ்செல்வி

மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ்செல்வி சீரியலில் குடும்பமே முருகன் பக்தர்கள். அதிலும் தமிழ்செல்வியின் பாட்டி சரியான முருக பக்தை.எதற்கெடுத்தாலும் தனது வெண்கலக் குரலால் முருகா முருகா என்று சொல்வது கே.பி.சுந்தராம்பாள் குரல் மாதிரியே இருக்கிறது. தமிழ்செல்வியும் ஏதாவது கஷ்டம் என்றால் நான் கும்பிடற முருகர்தன் என்னை இந்த கஷ்டத்தில் இருந்து காப்பாற்றினார் என்று சொல்வதும் நன்றாக இருக்கிறது.

காவடி எடுத்தல்

காவடி எடுத்தல்

ரோஜா சீரியலில் அர்ஜுன் விபத்திலே சாகக் கிடந்தப்போ, முருகா அர்ஜுன் சாரை காப்பாத்து... உனக்கு விரதம் இருந்து காவடி தூக்கறேன்னு வேண்டிக்கறா ரோஜா. அதே போல முருகனுக்கு ஒரு வாரம் விரதம் இருந்து முருகன் கோயிலுக்கு நடை பயணமாக காவடி தூக்கிக் கொண்டு அரோகரா கோஷமிட்டபடி போறாங்க. இதெல்லாம் தமிழர்களின் ரத்தத்தில் ஊறிப் போனதாயிற்றே கேட்கும்போது உடல் சிலிர்த்துப் போகாதா? அப்படித்தான் இருந்தது சீரியலில் இந்த கோஷத்தை கேட்டபோது.

பிரமாண்ட முருகன்

பிரமாண்ட முருகன்

தினம் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில் தொடர் அருந்ததியில், ஜமீன் பரம்பரை ஈஸ்வரி அம்மா முருகனுக்காக ஒரு கோயிலே கட்டி மக்கள் வழிப்பட வகை செய்துள்ளார். அது மட்டுமா, கார்த்திகை மாத கிருத்திகை அன்று முருகனுக்கு மலேசியாவின் பத்தமடை மலை முருகன் போல பிரமாண்ட முருகன் சிலையும் பிரதிஷ்டை செய்து ,பிரமாண்ட கிருத்திகை விழா நடத்துகிறார். வீட்டிலும் முருகன் சிலை வைத்து வழிபடுகிறார்கள். இவ்வளவு ஏன்...அந்த சீரியலில் முருகன் சக்திக்கும் துஷ்ட சக்திக்கும்தான் போராட்டம், போட்டின்னு தூள் பறக்குது.

இதெல்லாம் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தானே...பாராட்டலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X