எவிக்ஷனுக்கு இதெல்லாம் ஒரு காரணமா?: பிக் பாஸுக்கு குட்டு வைத்த ஆர்த்தி

By Siva

Recommended Video

மும்தாஜ் ரசிகையான ஆரத்தி பிக் பாஸை திட்டி வைரல் ட்வீட்- வீடியோ

சென்னை: மும்தாஜ் எவிக்ஷனுக்கு இதெல்லாம் ஒரு காரணமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்த்தி.

பிக் பாஸ் 2 வீட்டில் நாமினேட் செய்யப்பட்டவர்களில் ஐஸ்வர்யா வழக்கம் போல காப்பாற்றப்பட்டார். இதையடுத்து மும்தாஜ் வெளியேற்றப்பட்டார். மும்தாஜுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் கிடைத்த ஓட்டுகளில் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை கமல் நினைவூட்டினார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக சென்ற ஆர்த்தி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மும்தாஜ்

எவிக்ஷனுக்கு இதெல்லாம் காரணமா? #BiggBoss2Tamil
முதல் நாளில் இருந்து இன்று வரை சிங்கம்...கெத்து அக்கா
எல்லாத்துக்கும் கிளாப் பண்ற ஆடியன்ஸ் பலே பெர்ஃபாமர்ஸ்...மனங்களை வென்றவர்
அவரின் ரசிகையாக இருப்பது பெருமை என்று ட்வீட்டியுள்ளார் ஆர்த்தி.

கேள்வி

ஆர்த்தியின் ட்வீட்டை பார்த்த ஐஸ்வர்யாவின் ஆதரவாளர் ஒருவர் அவர் ஏதாவது ஒரு டாஸ்கை சரியாக செய்தார் என்று சொல்லுங்க பார்ப்போம் என்று கேட்டார். ஆர்த்தியோ மும்தாஜ் நன்றாக செய்த டாஸ்குகளை பட்டியலே போட்டு ஐஸ்வர்யா ஆதரவாளருக்கு குட்டு வைத்தார்.

நஷ்டம்

மும்தாஜை பாராட்டிய ஆர்த்தி அவர் வெளியேற்றப்பட்டது பிக் பாஸுக்கு தான் நஷ்டம் என்று தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்படும் வாரம் எல்லாம் ஏதாவது காரணம் சொல்லி அவரை காப்பாற்றிவிடுகிறார் பிக் பாஸ்.

நம்ம கட்சி

நம்ம கட்சி

ஆர்த்தி பிக் பாஸ் பார்வையாளர்கள் கட்சி. பார்வையாளர்களை போன்றே அவருக்கும் பேயாட்டம் ஆடும் ஐஸ்வர்யாவை பிடிக்காது. ஐஸ்வர்யா, பிக் பாஸ் பற்றி தில்லாக கமெண்ட் செய்து வருபவர் ஆர்த்தி. டைட்டில் மட்டும் அல்ல பிக் பாஸே ஐஸ்வர்யாவுக்கு தான் என்று அவர் துணிச்சலாக போட்ட ட்வீட்டை பார்த்து வியக்காதவர்களே இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X