பிக் பாஸ் 8ஐ தடை செய்.. ராணவ்வுக்கு வேற எதாவது உடைஞ்சிருந்தா புள்ள பொறக்குமா?.. கூல் சுரேஷ் ஆதங்கம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துக் கொண்ட கூல் சுரேஷ் நேற்று நடைபெற்ற வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நிலையில், பிக் பாஸ் சீசன் 8ஐ தடை செய்ய வேண்டும் என்று ஆவேசத்துடன் பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விஜய், அல்லு அர்ஜுன் குறித்தெல்லாம் பேசிய கூல் சுரேஷிடம் பிக் பாஸில் நடக்கும் விஷயங்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்பவே மோசமான நிகழ்ச்சி, அதுவும் இந்த 8வது சீசன் ரொம்ப கேவலமாக போய்க் கொண்டிருக்கிறது. உடனடியாக இந்த நிகழ்ச்சியை உதயநிதி ஸ்டாலின் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

போன சீசனே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் தான் கமல்ஹாசன் நைஸாக கழண்டுக் கொண்டார் என்றும் விஜய் சேதுபதி விவரம் தெரியாமல் வந்து வசமாக சிக்கிக் கொண்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான கூல் சுரேஷ் அந்த நிகழ்ச்சியையே கழுவி ஊற்றியிருக்கிறார்.
சண்டைக்காடான பிக் பாஸ்: இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் சாதூர்யமாக சண்டை எதுவும் போடாமல் பிசிக்கல் டாஸ்க்கில் சிறப்பாக விளையாடி வந்தனர். ஆனால், அது ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தவே இல்லை. 50 நாட்களாக பெருசா ஒன்றுமே இல்லை என விஜய் சேதுபதியே ஃபீல் செய்த நிலையில், இந்த முறை வாக்குவாதத்தை தாண்டி கைகலப்புக்குள் போட்டியாளர்கள் இறங்க ஆரம்பித்துவிட்டனர். ஆபாச பேச்சுக்கள், ஆபாச சைகைகள் என ஷோ அத்துமீறி செல்வதாகவும் புகார்கள் குவியத் தொடங்கிய நிலையில், சமீபத்தில் போட்டி ஒன்றில் ராணவ்வின் கை உடைந்து போனது அவரது குடும்பத்தினரை வெகுவாக பாதித்துள்ளது.
விஜய் சேதுபதி கண்டிக்கல: ஜெஃப்ரியை விஜய் சேதுபதி போன வாரமே கண்டித்து இருந்தால் இந்நேரம் என் மகன் கைக்கு ஒன்றும் ஆகியிருக்காது என ராணவ்வின் தந்தை விஜய் சேதுபதி மீது பழி சுமத்தும் அளவுக்கு நிகழ்ச்சி மோசமாக செல்ல ஆரம்பித்துள்ளது என்கின்றனர். இந்நிலையில், இந்த காரணத்தையே மேற்கோள்காட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியையே தடை செய்ய வேண்டும் என கூல் சுரேஷ் கூறியுள்ளார்.
வேற எதாவது ஆகியிருந்தா குழந்தை பிறக்குமா?: கை உடைஞ்சது ஓகே, வேற ஏதாவது படக்கூடாத இடத்துல பட்டிருந்தா குழந்தை பிறக்குமா? அவரோட வாழ்க்கையே இந்த மோசமான கேம் ஷோவால் போக வேண்டுமா? என கொதித்துப் பேசியுள்ளார் கூல் சுரேஷ். நீங்களும் அந்த நிகழ்ச்சிக்குப் போனவர் தானே என்கிற கேள்விக்கு போய் பார்த்தால் தானே உள்ளே நடப்பது தெரிகிறது. பிக் பாஸ் வீடு ஒரு நரகம் என கூல் சுரேஷ் கூறியுள்ளார்.
அடுத்த சீசன் வரவே கூடாது: இந்த சீசனை உடனடியாக தடை செய்ய வேண்டும். அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது. இங்கே மக்களின் மனங்களில் வன்மத்தையும் குரோதத்தையும் வளர்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உதயநிதி ஸ்டாலின் தடை செய்ய வேண்டும். அடுத்த சீசன் எல்லாம் ஆரம்பிக்கவே கூடாது என்றும் கூல் சுரேஷ் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











