வனிதா விஷயத்தில் மட்டும் தான் சொன்னதை செய்திருக்கிறார் பிக் பாஸ்
சென்னை: வனிதா விஜயகுமார் விஷயத்தில் மட்டும் தான் பிக் பாஸ் சொன்னபடி செய்துள்ளார்.
பிக் பாஸ் எப்பொழுதுமே சொல்வதை செய்ய மாட்டார், செய்வதை மாற்றி சொல்லிவிடுவார். இந்நிலையில் தான் அதுவும் 3வது சீசனில் தான் அந்த அதிசயம் நடந்துள்ளது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று தான் கூறியபடியே செய்துள்ளார் பிக் பாஸ். வனிதா விஜயகுமார் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து அவ்வளவு சீக்கிரத்தில் வெளியேற மாட்டார், அவரை பல வாரம் காப்பாற்றுவார்கள். பார்வையாளர்கள் போடும் ஓட்டுகளை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு வனிதாவை பிக் பாஸ் காப்பாற்றுவார் என்றே அனைவரும் நினைத்தார்கள்.
இந்நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத விதமாக வனிதா விஜயகுமாரை வெளியேற்றிவிட்டார்கள். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனை தொடர்பாக அவர் விரைவில் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
வனிதா விஷயத்தில் மட்டும் தான் பிக் பாஸ் சொன்னபடி நடந்துள்ளது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று வித்தியாசமாக செய்துவிட்டார். கடந்த முறை ஐஸ்வர்யா தத்தாவை காப்பாற்றியது போன்று வனிதாவையும் பிக் பாஸ் காப்பாற்றுவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. இந்த சீசனில் பிக் பாஸின் செல்லக்குட்டி வனிதா என்றே நம்பப்பட்டது. இந்நிலையில் தான் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
கமல் ஹாஸன் அருகே மேடையில் நின்று வனிதா பேசியதை பார்த்தவர்களால் அவர்களின் கண்களையும், காதுகளையுமே நம்ப முடியவில்லை. இந்த அளவுக்கு மெச்சூரான வனிதா தான் பிக் பாஸ் வீட்டில் மீன் மார்க்கெட்டில் சண்டை போடுவது போன்று நடந்து கொண்டாரா என்று பலர் வியந்துவிட்டனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களில் வனிதா போன்று ஒரு மோசமான போட்டியாளரை பார்த்ததே இல்லை என்று திரையுலக பிரபலங்கள் சிலர் கூட தெரிவித்தனர். இந்நிலையில் விளாசியவர்களையே தன்னை வாழ்த்த வைத்துவிட்டார் வனிதா.
வனிதா இல்லாத பிக் பாஸ் வீடு இனி நன்றாகவே இருக்காது. மீரா மிதுனை அடுத்த வனிதாவாக மாற்றி நிகழ்ச்சியை ஓட்டிவிடலாம் என்று பிக் பாஸ் நினைத்திருந்தால் அவர் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமம் என்கிறார்கள் பார்வையாளர்கள்.


Click it and Unblock the Notifications











