எதிர்பார்ப்பு பாரத்தை கொடுக்கும்.. மழைக்கு பஜ்ஜி, டீ சாப்பிட்டு ஈஸியா வாழுங்க.. விஜய் சேதுபதி செம!

சென்னை: மகாராஜா படத்தின் வெற்றி நடிகர் விஜய் சேதுபதியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து அந்த படத்துக்காக ஏகப்பட்ட புரோமோஷன்களில் அவரும் படக் குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய் சேதுபதி, படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன், நட்டி நட்ராஜ், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சாச்சனா உள்ளிட்ட படக்குழுவினர் விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள புதிய புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Tv Vijay Tv Vijay Sethupathi Maharaja Priyanka Deshpande

சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் சேதுபதி வருகை தந்து மகாராஜா படத்தை பிரமோட் செய்தார். தொடர்ந்து விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

புரோமோஷன் முக்கியம்: சில நடிகர்கள், நடிகைகள் படத்தில் நடித்து முடித்து விட்டு அந்தப் படத்துக்கான சம்பளத்தை வாங்கி விட்டோ அது போதும் அடுத்த படத்துக்கான அட்வான்ஸை வாங்க சென்று விடுவோம் என கிளம்பி விடுகின்றனர். ஆனால், விஜய் சேதுபதி போன்ற சில முன்னணி நடிகர்கள் தங்கள் படத்திற்காக விதவிதமான புரமோஷன்களை செய்து எப்படியாவது எல்லா மக்களையும் ரீச் செய்து இப்படி ஒரு படம் வந்திருக்கிறது தியேட்டருக்கு போய் பாருங்கள் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். ஒரு படம் ஹிட் ஆனால் தான் அந்த நடிகர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் நிலைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி: மகாராஜா படக்குழுவே ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது. விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் ரகளை செய்துள்ளனர். விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் பங்கேற்ற விஜய் சேதுபதி தற்போது பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

எதிர்பார்ப்பு பாரத்தை தரும்: பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தால் அது நடக்காத போது நிச்சயம் பெரிய பாரத்தை தரும். வாழ்க்கை எப்படி செல்கிறது அதை அந்தந்த நேரத்துக்கு தகுந்தவாறு ரசித்துக்கொண்டு செல்வதுதான் வாழ்வது. மழை பெய்யும் போது சூடாக பஜ்ஜி மற்றும் டீ சாப்பிட்டுக்கொண்டு அப்படியே அந்த நேரத்தை ரசித்து செல்வோம் அல்லவா அப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்க்கை தத்துவத்தை அழகாக விஜய் சேதுபதி ஸ்டார்ட் மியூசிக் சீசன் 5ன் புதிய புரோமோவில் பேசியுள்ளார். இன்று இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X