காதலை சொல்ல வழி இல்லாத பஞ்சு மிட்டாய்
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் ரவியிடம் தன் காதலை சொல்ல முடியாத அளவுக்கு பாக்கிய லட்சுமியின் வீட்டு நிலைமை இருக்கிறது.
பாக்கிய லட்சுமியை கறிச்சுக் கொட்டிக் கொண்டு இருந்த அவளின் அண்ணியின் தங்கை லெட்டர் எழுதி வச்சுட்டு காதலனுடன் ஓடிவிட்டாள்.
என் தங்கச்சியை சொன்னே.. இப்போ பார்த்தியா உன் தங்கச்சியோட லட்சணத்தைன்னு புருஷன்,அதாவது பாக்கிய லட்சுமியின் அண்ணன் சொல்றான்.

மேட்ச் கிரிக்கெட்
ரஞ்சி டிராபியில் ஜெயிச்சுட்டு வந்தால் பாக்கியலட்சுமி அந்த மூணு வார்த்தையை சொல்றதா ரவியிடம் சொல்லி இருக்கா. ரவி செஞ்சுரி அடிச்சுட்டு வீட்டுக்கு சந்தோஷமா பெங்களூருவில் இருந்து போன் செய்யறான் ரவி.

ரவி பாக்கிய லட்சுமியிடம்
வீட்டில் எல்லாரிடமும் பேசிட்டு தங்கை கமலாவிடம், பாக்கியலட்சுமிகிட்ட போனை குடுன்னு சொல்றான் ரவி. ஆனா, கமலா குடுக்காம பேசி கட் செய்து வச்சுடறா. பாக்கியலட்சுமி உன்கிட்ட காதலை சொல்ற வரைக்கும் நீயும் அவளை காய விடுன்னு கமலா ரவிகிட்ட சொன்னதுதான் காரணம்.

பாக்கியலட்சுமி இங்கே
ரவி அங்கே பஞ்சு நீ சொன்ன மாதிரியே நான் கிரிக்கெட் மேட்சில் செஞ்சுரி அடிச்சுட்டேன். நான் வந்த உடனே உன் வாயால அந்த மூணு வார்த்தையை சொல்றேன்னு சொல்லி இருக்கே பாக்கிய லட்சுமி. அதை நான் கேட்க போறேன்னு சொல்லி சிரிச்சுக்கறான்.இங்கே பாக்கியலட்சுமி ரவி என்னை மன்னிச்சுருங்க...என் வீட்டு சூழ்நிலையால் உங்ககிட்ட அந்த மூணு வார்த்தையை சொல்ல முடியாது ரவின்னு கண் கலங்குறா. .

சத்தியம் தாத்தாகிட்ட
என்னால இந்த குடும்பத்துக்கு எந்த கெட்ட பேரும் வராது தாத்தா... இது சாத்தியம்னு தாத்தாகிட்ட வேற பாக்கியலட்சுமி சத்தியம் செய்து குடுத்து இருக்கா... ஆண்களுக்கு என்ன எந்த பிரச்சனையும் இல்லை... பொண்ணுங்களுக்குத்தானே எல்லாமே...


Click it and Unblock the Notifications











