அவங்கள மட்டும் நம்பவே நம்பாதீங்க..சேரப்பாவுக்கு அட்வைஸ் செய்த ரசிகர்கள்!

Recommended Video

Cheran about bigg boss| Cheran Tweet| Kavin Love

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் டிவிட்டிய சேரனுக்கு ரசிகர்கள் முக்கிய அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன் ஞாயிற்றுக்கிழமை எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்பட்டார். மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர்கள் எல்லாம் பிக்பாஸ் வீட்டில் இருக்க, மனிதத் தன்மையுடன் இருந்து மக்களின் மதிப்பை பெற்ற சேரன் வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜய் டிவி செய்த சதியால்தான் சேரன் வெளியேற்றப்பட்டார் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி கூறி டிவிட்டியிருந்தார்.

நம்பாதீங்க

நம்பாதீங்க

அவரது டிவிட்டை பார்த்த ரசிகர்கள் தயவு செய்து, லாஸ்லியாவை மட்டும் நம்பிவிடாதீர்கள். அவர் போலித்தனமாக நடிக்கிறார் என இயக்குநர் சேரனுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

சேரப்பா ப்ளீஸ்

சேரப்பா ப்ளீஸ் அந்த ஃபேக் லாஸ்லியாவ நம்பாதீங்க.. இது சேரன் சாரின் அனைத்து ஃபேன்களில் தாழ்மையான வேண்டுகோள். உங்களுடைய உண்மையான பாசத்திற்கு கொஞ்சமும் தகுதியில்லாதவர் லாஸ்லியா. அவளுடைய ஆதாயத்திற்காக அப்பா மகள் உறவை பயன்படுத்திக்கொண்டாள். நாங்கள் உங்களை எங்கள் இதயத்திலிருந்து நேசிக்கிறோம். சேரப்பா எங்களின் அப்பா பிக்பாஸில் விளையாடியதை போல் உணர்ந்தோம் என்கிறார் இந்த ரசிகர்.

மகளிடம் சொல்லி வளர்க்கிறேன்

என் பெயரும் சேரன்தான் சார்.. என் ஒரு வயது மகளிடம் சேரப்பா சேரப்பா என்று சொல்லி வளர்க்கிறேன் சார்.

போராடுவோம்

அப்பா இங்கு உங்களுக்கு பல மகள்கள் இருக்கிறோம். உங்களை பிக்பாஸில் காப்பாற்ற நாங்கள் போராடினோம்.. இனி உங்களின் படத்தை வெற்றி பெற செய்ய போராடுவோம்.. என பதிவிட்டிருக்கிறார் இந்த ரசிகர்.

நினைவில் இருப்பீர்கள்

உங்கள் படத்திற்காக காத்திருக்கிறோம்.. நீங்கள் எப்போதும் சேரப்பாவாக நினைவில் இருப்பீர்கள்.. ஒரு சிறந்த அப்பாவாகவும் அண்ணனாகவும்..என்கிறார் இந்த நெட்டிசன்.

கள்ளம் கபடமற்ற மனிதன்

சார், உங்களுக்கு நான் சொன்னால் புரியாது, நாங்கள் எவ்வளவு தூரம் உங்களின் இந்த டிவிட்டுக்கு காத்து இருந்தோம் என்று. இந்த அன்பு டைரக்டர் சாருக்கு அல்ல, நல்ல கள்ளம் கபடமற்ற மனிதன் சேரனுக்கு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சேரன் சார் ஒரு வைரம்

எங்கிருந்தாலும் வைரம் ஜொலிக்கும் சேரன் சார் ஒரு வைரம். அது பிக்பாஸா இருந்தாலும் சரி பிலிம் இன்டஸ்ட்ரியா இருந்தாலும் சரி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நாங்கள் இருக்கிறோம்

உங்கள் இரண்டு மகள்களுக்காக பிக்பாஸ் சென்றீர்கள். இப்போ உங்களுக்கு நிறைய மகள்கள் நாங்கள் இருக்கிறோம் அப்பா என்கிறார் இவர்

டைட்டிலினும் மேலானது

எங்களுக்கும் கூட பிக்பாஸ் நிகழ்ச்சி 91 நாட்களுடன் முடிவடைந்தது சேரன் சார். வெவ்வேறு ரசனை,வயது, சிந்தனையுடைய எனது குடும்பத்தின் 5 உறுப்பினர்களின் மனதினை வென்றதே டைட்டிலினும் மேலானதாக எண்ணுகிறேன் சார். கூடிய விரைவில் தங்களது புதிய படைப்புகளை காண விரும்புகிறோம் வாழ்த்துக்கள் சார் என்கிறார் இந்த ரசிகர்.

சேத்துக்காதீங்க

எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பவும் இருக்கும் சார்.
அந்த நாடகக்காரி ககூஸ்லியாவ மட்டும் சேத்துக்காதிங்க. என்கிறார் இந்த ரசிகர்.

நீங்களும் மதுமிதாவும் தான்

உண்மையா நீங்கதான் வெற்றியாளர். அது பிக்பாஸ் "இல்லம்" நாம் இல்லத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியது நீங்களும் மதுமிதா மட்டுமே என்று கூறுகிறார் இவர்.

விஜய் டிவியின் சூழ்ச்சி

சார்‌, நீங்கள் குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற வில்லை
விஜய் டிவி சூழ்ச்சியால் வெளியேற்றப்பட்டீர்கள். ஆனால் மக்கள் மனதில் எப்பொழுதோ வென்றுவிட்டீர்கள். வாழ்த்துக்கள் இன்று கூறுகிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X