BB8: வெறித்தனமாக நடக்கும் TTF.. பவித்ராவுக்கு நடந்தது அநியாயம்.. பிக்பாஸை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு உள்ளது. இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் போட்டியாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் வரும் வாரங்களிலும் இரண்டு எவிக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படியான நிலையில், இந்த சீசனின் டிக்கெட் டூ ஃபினாலே அதாவது TTFக்கான போட்டிகள் இந்த வாரத்தில் தொடங்கிவிட்டது. போட்டிகள் மிகவும் தீவிரமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது. இதில் நடைபெற்ற ஒரு சம்பவம் ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8இன் கடைசி 10 போட்டியாளர்களாக, முத்துக்குமரன், பவித்ரா, ஜாக்குலின், மஞ்சரி, தீபக், ரானவ், ரயான், விஷால், அருண் மற்றும் சௌந்தர்யா உள்ளிட்டோர் உள்ளார்கள். இவர்களுக்குள் ஏற்கனவே இந்த வாரம் நாமினேஷனில், முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யாவைத் தவிர மற்ற அனைவரும் நாமினேஷனில் உள்ளார்கள். அதாவது, பவித்ரா, ஜாக்குலின், மஞ்சரி. தீபக், ரானவ், ரயான், விஷால் மற்றும் அருண் ஆகியோர் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

TTF: இந்த வாரத்தில் நடைபெறும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் போட்டியாளர்களில் யார் அதிக புள்ளிகளை வென்று, TTFஐ வெல்கின்றார்களோ, அவர்கள் நாமினேஷனில் இருந்தாலும், போட்டியின் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்படுவார். இப்படியான நிலையில் போட்டியாளர்களுக்கு இடையில் கடுமையான போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

பவித்ரா: அதிலும் குறிப்பாக, போட்டியாளர்களின் உடல் திறனை தகுதியை சோதிக்கும் வகையில்தான் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் டாப் லிஸ்ட்டில் ஆண்களே உள்ளார்கள். இப்படியான நிலையில், மீண்டும் உடல் திறனை சோதிக்கும் போட்டியாக ஒரு போட்டி பிக் பாஸ் தரப்பில் நடத்தப்பட்டது. அதாவது, போட்டியாளர்கள் ஒரு லைட்டைத் தொடவேண்டும். லைட்டைத் தொடும்போது, அந்த லைட் எரியும். அதுவே லைட்டில் இருந்து போட்டியாளர்கள் கையை எடுத்துவிட்டால், லைட் அணைந்துவிடும், இதுமட்டும் இல்லாமல், அந்த போட்டியாளர் அந்த டாஸ்கில் இருந்து வெளியேற்றப்படுவார்.

ரசிகர்கள் கேள்வி: இப்படியான நிலையில் போட்டியாளர் பவித்ரா லைட்டில் கை வைத்திருக்கும்போதே, லைட் அணைந்துவிட்டது. இதனை 24*7இல் பார்த்த ரசிகர்கள், பவித்ராவிற்கு நடைபெற்றது என்பது அநியாயம். இந்த போட்டியை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
பிக் பாஸ் வீட்டில் இப்படி ஒரு அநியாயம் நடப்பதா? ஏன் எப்போது பார்த்தாலும் பவித்ராவிற்கு மட்டும் இப்படி நடக்கின்றது? பவித்ராவுக்கு நடப்பதெல்லாம் தற்செயலானவையா? அல்லது திட்டமிட்டே நடத்தப்படுபவையா? என்ற கேள்வியை இணையவாசிகள் கேட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











