இந்த பிக் பாஸுக்கு இதே வேலையாப் போச்சு: திருந்தவே மாட்டாரா? #BiggBoss2Tamil
Recommended Video

சென்னை:ஒவ்வொரு சீசனிலும் இந்த பிக் பாஸுக்கு இதே வேலையாகப் போச்சு.
பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதையடுத்து அதன் 2வது சீசனை நடத்துகிறார்கள். 2வது சீசன் இன்று இரவு 7 மணிக்கு துவங்குகிறது. ஆனால் இதுவரை போட்டியாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இருப்பினும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என்று கூறி ஒரு பட்டியல் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.

ஹீரோ
போட்டியாளர்கள் பட்டியலில் ஹீரோ, ஹீரோயின், கவர்ச்சிப் புயல்கள், காமெடியன், வில்லன் என்று வகை, வகையாக ஆட்கள் உள்ளனர். ஒரு பக்கா கமர்ஷியல் படம் எடுக்கத் தேவையானவர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார்கள்.

ஆவல்
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க சில மணிநேரங்களே உள்ள நிலையில் போட்டியாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளனர். ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கவே இந்த செயல்.

இப்படித் தான்
எப்பொழுதுமே ரசிகர்களின் ஆவலை தூண்டிவிடுவது தான் பிக் பாஸ் வேலை. ப்ரொமோ வீடியோக்களில் கூட அதை தான் செய்கிறார்கள். அதனால் ப்ரொமோ வீடியோக்களை நம்பக் கூடாது என்கிறார்கள் ரசிகர்கள்.

எதிர்பார்ப்பு
கடந்த சீசனை போன்று இந்த சீசனும் களைகட்டுமா, கமல் ஹாஸன் அரசியல் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சர்ச்சை ஏற்பட வேண்டும் என்றே பார்த்து பார்த்து போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











