BB: போட்டியாளர்களை பச்சை மிளகாய் சாப்பிட வைத்த பிக்பாஸ்! இது பார்வதிக்கு ரெட் கார்டு கொடுத்ததை விட வொர்த்

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க முந்தய வாரங்களைக் காட்டிலும் சுவாரஸ்யமாக இருந்து கொண்டு உள்ளது. அதுவும் கடந்த வாரத்தில் சனிக்கிழமை எபிசோடில் விஜே பார்வதி மற்றும் கமருதீன் என இருவரையும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படி இருக்கையில் இன்று போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் தரப்பில் வைக்கப்பட்ட ஒரு டாஸ்க் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதாவது கடந்த வாரத்தில் நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் அரோரா வெற்றி பெற்று, முதல் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகி உள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள டாஸ்க் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல், போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் மீதான நன்மதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Fans Appreciate Bigg boss Tamil Contestants For Green Chilli Task For Save Sabari Which Is Worth More Than VJ Parvathy Kamruddin Red Card
Photo Credit:

அதாவது, போட்டியாளர்கள் அனைவரையும், தனித்தனியாக அழைத்து பிக்பாஸ் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது, இந்த வார நாமினேஷன் பிராசஸில் இருந்து ஒரு போட்டியாளரை பாதுகாக்க வேண்டும் என்றால், அப்படி யாரை பாதுகாப்பீர்கள்? காரணம் என்ன என்று சொல்லிவிட்டு, ஒரு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த கேள்விக்கு சபரியை தவிர்த்து மற்ற போட்டியாளர்கள் அனைவரும் தெரிவித்தது, சபரியின் பெயரைத் தான். அதுவும் கடந்த வாரத்தில் சான்ட்ராவுக்கு நெருக்கடியான சூழல் ஏற்படும்போது, சபரி தனக்கு டிக்கெட் டூ ஃபினாலே எல்லாம் வேண்டாம் என்று உடனே டாஸ்க்கில் இருந்து வெளியேறி சான்ட்ராவுக்கு உதவினார். மேலும் சான்ட்ராவிடம் எனக்கு ஒரு அக்காவோ, தங்கையோ இப்படி அடிபட்டு இருந்தால் நான் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பேனா என்று கேட்டார்.

Fans Appreciate Bigg boss Tamil Contestants For Green Chilli Task For Save Sabari Which Is Worth More Than VJ Parvathy Kamruddin Red Card
Photo Credit:

பச்சை மிளகாய்: சபரியின் இந்த ஒற்றைக் கேள்வி மொத்த ரசிகர்கள் மனதையும் வென்று விட்டது, அது மட்டும் இல்லாமல் சபரி சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். இப்படி இருக்கையில் போட்டியாளர்கள் அனைவரும் சபரி பெயரைச் சொல்லி அவரை இந்த வார நாமினேஷன் பிராசஸில் இருந்து காப்பாற்றி உள்ளதும், அதற்கு இப்படியான டாஸ்க்கை வைத்ததும் பாராட்டுக்குரியது என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். போட்டியாளர்கள் இதில் ஒன்று பட்டு நின்றதும் பாராட்டுக்குரியது என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலரோ, பார்வதி - கமருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்தது எப்படி சரியோ, அதைவிட இந்த பச்சை மிளகாய் டாஸ்க் வொர்த்தானது என்று புகழ்ந்து வருகிறார்கள். இதன் மூலம் சபரி கிட்டத்தட்ட இறுதிப் போட்டியாளராக மாறிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X