அபிம்மா.. வேற வேலையே இல்லையா.. கொஞ்சம் மத்த வேலையும் பாரும்மா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகெனை காதலிப்பதாக கூறி லவ் டார்ச்சர் செய்துவரும் அபியை கழுவி ஊற்றி வருகின்றனர் ரசிகர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி முகென் பின் காதல் காதல் என சுற்றி வருவது பார்வையாளர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் அபிராமி, வந்த முதல் நாளே கவினை காதலிப்பதாக கூறினார். மேலும் சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்தே கவினை காதலித்து வருவதாகவும், ஃபேஸ்புக்கில் அவரை பின்தொடருவதாகவும் கூறினார்.

அப்போதைய தோழிகள்
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடனே கவினின் பிறந்தநாளை அறிந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். கவின் மீதான தன்காதலை அப்போதைய தோழிகளான சாக்ஷி மற்றும் ஷெரினிடம் கூறினார்.

முகென் மீது காதல்
ஆனால் கவின் அபிராமியின் காதலை ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து முகெனை காதலிக்க தொடங்கிவிட்டார் அபிராமி. ஆனால் முகெனுக்கு அபிராமி மீது துளியும் காதல் இல்லை.

பெண்களே கோபம்
ஆனால் முகெனை துரத்தி துரத்தி காதலித்து வருகிறார் அபிராமி. அபிராமியின் இந்த நடவடிக்கை பார்வையாளர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு மலேசியாவில் காதலி இருப்பதாக கூறிய பின்னரும் அபிராமி, முகெனை தன் பக்கம் இழுக்கப் பார்ப்பது பெண்களுக்கே அவர் மீது கோபத்தை உண்டாக்குகிறது.

ஏற்கனவே தோல்வி
ஏற்கனவே அபிராமி இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்றும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற போட்டோக்களும் வெளியாகி வைரலாகின. மேலும் தனக்கு ஒரு காதல் இருந்து அது தோல்வியடைந்துவிட்டதாக கூறியுள்ளார் அபிராமி.

மற்ற வேலையும் பாரு
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் முதலில் கவினை காதலித்த அபிராமி தற்போது முகென் பின்னால் சுற்றி வருகிறார். இது பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. அபிராமியின் இந்த நடவடிக்கையை பார்த்த மக்கள், இதற்கு தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தாயா மற்ற வேலையையும் கொஞ்சம் பாரு என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











