என்ன எடிட்டிங்.. புரமோல காட்றத புரோகிராம்ல காட்டமாட்றீங்களே பிக்பாஸ்?

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 5: Promo 2: தர்ஷன்னை திட்டிய மோகன், புரியவைக்கும் பாத்திமா- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் புரமோவிற்கும் புரோகிராமுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் உள்ளது.

விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு நாள் முழுவதும் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்படுகிறது.

அதற்கு முன்னதாக பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சுவாரசிய சம்பவங்கள் புரமோக்களாக வெளியிடப்படும். அந்த புரோமோக்கள் நிகழ்ச்சியின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும்.

சம்பந்தமில்லாதது

சம்பந்தமில்லாதது

ஆனால் புரோமோக்களில் காட்டப்படும் பல சம்பவங்கள் நிகழ்ச்சியில் காட்டப்படுவதில்லை. மாறாக சம்பந்தமில்லாத விஷயங்கள்தான் காட்டப்படுகின்றன.

ரசிகர்கள் கடுப்பு

ரசிகர்கள் கடுப்பு

இந்த தவறு கடந்த 2 சீசன்களிலும் நடந்தது. தற்போது மூன்றாவது சீசனிலும் இது தொடர்ந்துள்ளது. இதனால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

கண்ணீர்விட்ட தர்ஷன்

கண்ணீர்விட்ட தர்ஷன்

நேற்றைய பிக்பாஸ் புரமோவில் தர்ஷனை தன்னை அப்பா என கூப்பிடக்கூடாது என முகத்தில் அடித்தாற் போல் கூறினார். இதனால் மனது உடைந்து போய் கண்ணீர் விட்டார் தர்ஷன். இது ஹவுஸ் மேட்ஸை ரொம்பவே காயப்படுத்தியது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

இதனால் நடந்ததை முழுவதுமாக காண வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாய் இருந்தனர். ஆனால் இரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அந்தக் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை.

ஏமாற்றுவது சரியா?

ஏமாற்றுவது சரியா?

ஒரு நாள் முழுவதும் நடக்கும் சம்பவங்களை ஒரு மணிநேரத்தில் சொல்வது கடினம்தான். அதேநேரத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுவிட்டு ஏமாற்றுவது சரியா என்கின்றனர் ரசிகர்கள்.

எபிசோடுல காணோம்

புரமோல மோகன் வைத்யா தர்ஷன் சண்டை போட்டீங்க.. ஆனா எபிசோடுல அதை காணோம்.. ஹாட்ஸ்டார்லதான் வரும் போல.. என்கிறார் இந்த நெட்டிசன்.

அழற சீன் காமிக்கல

என்னப்பா கடைசி வரைக்கும் தர்ஷன் அழற சீன் காமிக்கல.. மோசம் டா... என்கிறார் இந்த நெட்டிசன்.

முடிச்சிட்டீங்களே..

புரமோல வந்த மோகன் வைத்யா சார் மற்றும் தர்ஷன சீன் எங்கய்யா பிக்பாஸ்? பாதி நேரம் பொம்பள பசங்கள் குழாயடி சண்டைய காட்டி முடிச்சிட்டீங்களே மேன்... என்கிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X