சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? மனசாட்சி இல்லாத டைரக்டர்..அண்ணா சீரியலால் கடுப்பான பேன்ஸ்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 2022ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் செந்தில், நித்யா ராம், பூவிலங்கு மோகன், ப்ரீதா சுரேஷ்,சத்யா, ஸ்ரீ லதா, ரோசரி, சுனிதா, அபினாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் இந்த சீரியலில், சௌந்தரபாண்டியன் செய்த சதியால், குழந்தைகளை பிரிந்து கெட்ட பெயருடன் சூடாமணி 20 வருடமாக ஜெயிலில் இருக்கிறாள். இதையடுத்து, அண்மையில் பரோலில் வந்த சூடாமணி, தான் எந்த தவறும் செய்யவில்லை, உத்தமி என்பதை நிரூபிப்பேன் என சத்தியம் செய்து சௌந்தர பாண்டியிடம் சவால் விடுகிறாள். இதையடுத்து, தன் தாய் மீது இருந்த கலங்கத்தை சண்முகம் துடைத்து, சௌந்தர பாண்டியை ஜெயிலுக்கு அனுப்பினான்.

அண்ணா சீரியல்: ஜெயிலுக்கு அனுப்பி சூடாமணியை பழிவாங்க துடித்த சௌந்தரபாண்டி, சரியான நேரத்திற்காக காத்திருந்து, ரத்னாவின் திருமணம் நடக்கும் நேரத்தில், சூழ்ச்சி செய்து மருதப்பனை ஏவிவிட்டு சண்முகத்தை கொல்ல திட்டம் போட்டு, ரத்னா கல்யாணம் நடக்கும் நேரத்தில் அடி ஆட்களுடன் மருதப்பன் வந்து, சண்முகத்தை கத்தியால் குத்த வர சூடாமணி குறுக்கே வர, கத்தி சூடாமணி வயிற்றில் பாய, சூடாமணி அப்படியே சரிந்து விழுகிறாள்.

கண்ணீரில் ரசிகர்கள்: இதனால் ஷண்முகம் குடும்பம் மொத்தமும் சோகத்தில் மூழ்க, சூடாமணி ரத்னாவின் திருமணத்தை பார்த்து விட்டு, சண்முகத்திடம் சத்தியம் வாங்கிவிட்டு இறந்து விடுகிறாள். இதையடுத்து, நான்கு தங்கைகளும் சண்முகமும் சேர்ந்து சூடாமணியின் இறுதி சடங்குகளை செய்ய, சண்முகம் கொள்ளி வைக்கிறான், இந்த காட்சி நேற்று ஒளிபரப்பானது. இது அனைத்தும் ரசிகர்களின் கண்களையும் குளமாக்கியுள்ளது.

பாவம் சூடாமணி: இதை கொஞ்சமும் தாங்கிக் கொள்ள முடியாத, அண்ணா சீரியல் பிரியர்கள், இணையத்தில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சண்முகமும் அவன் தங்கைகளும் அழும் காட்சிகளை பார்க்கும் போது, கண்கள் கலங்குகிறது, மேலும் 20 வருஷமா ஜெயிலில் இருந்து பரோலில் வந்த சூடாமணி இனியாவது குடும்பத்தோடு சந்தோசமாக இருப்பது போல் கதையை கொண்டு போய் இருக்கலாம் என்றும்,

ஒரு நியாயம் வேண்டாமா: மனசாட்சி இல்லாத டைரக்டர், இத்தனை நாளான கணவன், குழந்தைகள் என பிரிஞ்சி இருந்தாங்க, அவங்க சந்தோஷமாக இருக்கும்படி செய்து இருக்கலாமே, சீரியலாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா, மனசு கஷ்டமா இருக்கு, இது கனவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் அனைவரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து வருவதாகவும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











