சீரியல் சொதப்பல்கள்.. எழவே விழுந்தாலும் மேக்கப் கலையகூடாதா?.. கடுப்பாகும் ஃபேன்ஸ்!
சென்னை: சினிமாவை விட சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருந்தாலும் சில நேரம், அந்த சீரியலில் நடக்கும் விஷயத்தை எல்லாம் பார்க்கும் போது என்ன கொடுமைடா.. இது என்று சொல்லும் அளவிற்கு இருக்கும். ரோஜா சீரியலில் நடுரோட்டில் நடந்த பிளாஸ்டிக் சர்ஜரி தொடங்கி, படத்தின் காட்சியை அப்படியே காப்பியடித்து சீரியலில் வைப்பதைக்கூட வரை அனைத்தையும் பார்த்து பார்த்து ரசிகர்கள் பழகிவிட்டார்கள். ஆனால், வீடே பத்திக்கிட்டு எரிஞ்சாலும், எழவே விழுந்தாலும் மேக்கப் கலையாமல் இருப்பதை பார்க்கும் போது தான் செம கடுப்பா வரும் அப்படி நடந்த ஒரு சம்பவத்தை தான். இந்த செய்தியில் பார்க்கலாம்.
கெட்டிமேளம்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் கெட்டி மேளம். திங்கள் முதல் சனி வரை மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், சாயா சிங், வந்தனா, ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த சீரியல் இப்போ பரபரப்பாக கட்டத்தில் உள்ளது.

என்ன கொடுமைடா சாமி: இதில், நேற்றைய எபிசோடில், அபிராமிக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. அந்த பாராட்ட விழாவில், துளசிக்கு பதிலா அபிராமி மீது குண்டு பாய்ந்துவிட, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அபிராமியை காப்பாத்தவே முடியாது, இதயத்துக்கு பக்கத்துல குண்டுபட்டு இருப்பதால், காப்பாத்துவது ரொம்ப கஷ்டம் என மருத்துவர் சொல்லிவிடுகிறார். ஆனால், அபிராமியின் மருமகளான துளசி கோவிலில் தீச்சட்டி எடுத்து, பச்ச தண்ணீர்கூட குடிக்காமல் கடுமையான விரதம் இருந்து மாமியாரை காப்பாத்தி விடுகிறார்.
மேக்கப் கலையக்கூடாது: மாமியாருக்கு ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்துவிட, அடுத்த நாளே மாமியார் வீட்டுக்கு வருகிறார். எப்படி வருகிறார் தெரியுமா, பட்டுப்புடவை கட்டி, பட்டு ஜாக்கெட் போட்டு கல்யாண பெண் போல வருகிறார். நேத்து சாவ கிடந்த அபிராமி மாமியார், இன்னைக்கு ஃபுல் மேக்கப்புடன் வீட்டிற்கு வருகிறார். சீரியலாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா, குறைந்தபட்சம் அவருக்கு ஒரு பழைய புடவையாவது கொடுத்து இருக்கலாம், இல்லை மேக்கப்பையாவது குறைத்து இருக்கலாம், எதுவுமே இல்லாமல் ஆப்ரேஷன் ஆன அடுத்த நாளே இப்படித்தான் வீட்டுக்கு வருவார்களா? என்னத்தான் இருந்தாலும் ஒரு லாஜிக் வேண்டாமா? எழவு விழுந்தாலும் மேக்கப் கலைய கூடாதா? என இணையவாசிகள் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சொதப்பல் 2: அதேபோல கார்த்திகை தீபம் சீரியல் நேற்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரேஷ்மா ஒரு விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு 'பேண்டேஜ்' போட்டு இருந்தார். ஆனால், அடுத்த காட்சியில் சாமுண்டீஸ்வரி தலையில் எந்த பேண்டேஜூம் இல்லாமல் வருகிறார். அதன் பின் வரும் காட்சியில் தலையில் 'பேண்டேஜ்' இருக்கு, இது ரொம்ப சாதாரணமான விஷயம் இதைக்கூடாவ இயக்குநர் கவனிக்கவில்லை என இணையவாசிகள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











