சேரனுக்கும் சரவணனுக்கும் நல்ல அன்டர்ஸ்டேன்டிங் வர நேரத்துல இப்படி பண்ணீட்டிங்களே பிக்பாஸ்?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனுடன் நன்றாக பழக தொடங்கிய நேரத்தில் சரவணன் வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 27ஆம் தேதி கமல் பங்கேற்ற எபிசோடின் போது கல்லூரி காலத்தில் பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் சென்றிருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறினார் சரவணன். அப்போது கமலும் அதற்கு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.
சிரித்தபடியே மீரா - சேரன் பஞ்சாயத்தை பார்க்க சென்றுவிட்டார். ஆனால் சரவணன் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் கடந்த 29ஆம் தேதி எபிசோடில் தான் பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சரவணன்.

மிரட்டிய சரவணன்
இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையில் சேரனை மரியாதை குறைவாக நீ போ, போயா என்று பேசினார் சரவணன். மேலும் உனக்கு என்ன பிரச்சனை என்று அடிப்பது போல் சேரனை நோக்கி மிரட்டியபடி சென்றார் சரவணன்.

வெளியே அனுப்புங்கள்
இதனால் ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இனியும் தொடரக்கூடாது, அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்கள் என்று சமூக வலைதளங்களில் குரல் வலுத்தது.

கமல் சந்திப்பு
திரைத்துறையை சேர்ந்த பலரும் சரவணனுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்தார் கமல்.

மன்னிப்பு கேட்ட சரவணன்
அப்போது சேரனுக்கும் சரவணனுக்கும் இடையிலான உரசல் குறித்து பேசினார் கமல். மேலும் சேரனை ஒருமையில் பேசியதையும் கமல் கண்டித்தார். இதனால் தான் பேசியது தவறுதான் என்று கூறிய சரவணன் சேரனிடம் மன்னிப்பு கோரினார்.

ஆரத்தழுவினர்
மேலும் கமல் சந்திப்புக்கு பிறகு பிக்பாஸ் வீட்டின் கிச்சனில் சேரனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க போனார் சரவணன். அப்போது நான் எப்போதுமே உங்களுக்கு முன்பு அசிஸ்ட்டன்ட் டைரக்டர்தான் என்று கூறினார் சேரன். இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டனர்.

நெகிழ்ந்த மக்கள்
சரவணன் சேரனிடம் பேசியது தவறாக இருந்தாலும், அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சென்றதும் மக்கள் நெகிழ்ந்து போயினர். அதனை தொடர்ந்து இருவருக்குள்ளும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நன்றாகதான் சென்று கொண்டிருக்கிறது.

நட்புடன் பழகினர்
நேற்றைய எபிசோடில் கூட ஹவுஸ்மேட்ஸ்களுக்கு டாஸ்க் கொடுத்த பிக்பாஸ் சேரனையும் சரவணனையும் நடுவர்களாக நியமித்தார். வந்த நாள் முதல் சேரன் குறித்து தவறான புரிதலில் இருந்த சரவணன் கடந்த இரண்டு நாட்களாகதான் நட்புடன் பழகினார்.

பார்வையாளர்கள் சோகம்
இதுவரை காரணமே இல்லாமல் சேரனை நாமினேட் செய்து வந்த சரவணன், இந்த வாரம் தான் அவரை நாமினேட் செய்யவில்லை. வரும் நாட்களில் இருவரும் எப்படி பழகுகின்றனர் என்பதை பார்க்க பார்வையாளர்கள் ஆர்வமாய் இருந்தனர். சேரனுக்கும் சரவணனுக்கும் இடையே நல்ல அன்டர்ஸ்டேன்டிங் வரும் நேரத்தில் பிக்பாஸ் சரவணனை திடீரென வெளியே அனுப்பியது பார்வையாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











