கணவரின் சட்டை, கப்பு.. அழுமூஞ்சி சாண்ட்ராவின் ஓவர் ஆட்டிட்யூட்.. இதே வேலையா?கடுப்பாகும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த சாண்ரா, கணவர் எலிமினேட்டாகி சென்றதிலிருந்து, ஏதாவது ஒரு பிரச்சனையை காரணமாக சொல்லி அழுது கொண்டே இருப்பதால் கடுப்பான ஃபேன்ஸ், சாண்ராவை வெளியே அனுப்புங்கள், ஓவர் ஆட்டிட்யூட் என இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதல்முறையாக கணவன் மனைவியாக பிரஜன் மற்றும் சாண்ரா இருவரும் வந்தனர். பிக் பாஸ் வீட்டிலும், சாண்ரா பிரஜன் பின்னாடியே சுற்றிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து கடுப்பான விக்ரம், இருவரும் தனித்தனியாக விளையாடாமல், கணவன் மனைவியாக சேர்ந்து விளையாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டால் தனியாக விளையாட நினைத்த பிரஜன், திவ்யாவுடன் அதிக நேரத்தை செலவழித்தார். இதைப்பார்த்து சாண்ட்ரா கடுப்பாகி அப்போதும் தனியாக சென்று அழுதார்.

பிக் பாஸ் சாண்ரா: அந்த நேரத்தில் தான் பிரஜன் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். பிரஜன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கு திவ்யாவுடன் பேசியது தான் காரணம் என தவறாக புரிந்து கொண்ட சாண்ரா, திவ்யாவுடன் தொடர்ந்து சண்டைகளை போட்டு வருகிறார். திவ்யாவிடம் மட்டுமல்லாமல் யார் எந்த கருத்தை கூறினாலும், அந்த கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் நான் செய்வது தான் சரி என ஆக்ரோஷமாக கத்தி சண்டை போடுகிறார். பலமுறை திவ்யா என் மீது என்ன கோபம் என கேட்டும், சாண்ரா முகம் கொடுத்து கூட பேசாமல் புறக்கணித்துக்கொண்டே இருக்கிறார்.
கத்தி கூப்பாடு போடும் சாண்ரா: நேற்றிரவு இரவு சபரி, அரோரா, சுபிக்ஷா என அனைவருமே ஜாலியாக பாட்டு பாடி கொண்டிருக்க, சத்தத்தால், தூக்க முடியவில்லை என ஆத்திரப்பட்ட சாண்ரா அவர்களிடம் சண்டை போட்டுக்கொண்டு, கார்டன் ஏரியாவில் படுத்துக்கொண்டார். அனைவரும் சென்று சமாதானப்படுத்தியும், சமாதானம் ஆகாத சாண்ரா தொடர்ந்து அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். பிரஜன், வெளியில் சென்றதில் இருந்து எப்பொழுதுமே தனியாக, பிக் பாஸ் வீட்டு வாசப்படியில் பிரஜனின் சட்டை மற்றும் கப்பை வைத்துக்கொண்டு தொடர்ந்து ஏதாவது ஒரு காரணத்துக்காக அழுது கொண்டு அழுமூஞ்சியாகவே இருக்கிறார் சாண்ரா.
வெளியே அனுப்புங்க: இதனைப்பார்த்து கடுப்பாகிப்போன ஃபேன்ஸ், தயவு செய்து அழுமூஞ்சி சாண்ராவை வெளியில் அனுப்புங்க, தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்கி தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறார். அவர் விளையாடுவதற்கு வந்ததுபோல தெரியவில்லை, கணவர் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் சாண்ரா என மக்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக, தினமும், பிரஜனின் சட்டையை போட்டுக்கொண்டு அனுதாப அலையை தேடுகிறார். அவரை வெளியில் அனுப்புவதுதான் சரி என இணையத்தில் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதை காரணத்தை சொல்லி வீட்டில் கனி, அமித், வினோத், எப்ஜே, அரோரா என அனைவரும் சாண்ராவை நாமினேட் செய்துள்ளனர். ஆனால், இதுவரை வந்த தகவல் படி டேஞ்சர் ஜோனில் அமித், ஆதிரை, கனி, சுபிக்ஷா உள்ளனர். அதிக வாக்குகளை பெற்று கம்ருதீன், பாரு, திவ்யா,சபரி, சாண்ரா உள்ளனர்.


Click it and Unblock the Notifications











