BB8: முத்துக்கு விரித்த வலையில் சிக்கிய ஜாக்குலின்.. கடனை அடைக்க எடுத்த முடிவு.. கண்கலங்கிய ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையோடு முடிய உள்ள நிலையில், இப்ப நிகழ்ச்சி சுவாரசியமாக போயிட்டு இருக்கு. வழக்கமாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியாளர்கள் வெளியே தான் வருவாங்க, ஆனா இந்த சீசன்ல
பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துவிட்டால், உள்ளே இருக்கலாம் என்று, ஒரு புது விதமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஜாக்லின் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு தாமதமாக வந்ததால், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதால், கவலை அடைந்த ரசிகர்கள் இணையத்தில் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, அக்டோபர் மாதம் கோலாக்கலமாக தொடங்கிய நிலையில், வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த சீசனில், பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துவிட்டால், வீட்டிற்குள் இருக்கலாம் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில், முதல் நபராக 50 ஆயிரம் பணப்பெட்டியுடன் 30 செகண்ட்ல ஓடி வந்து பணப்பெட்டியை பெற்றார் முத்துக்குமார். அதைத்தொடர்ந்து, ராயன் ரூ 2 லட்சம் பெட்டியுடன் வீட்டிற்குள் வந்தார்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துவிட்டாள். வீட்டிற்குள் இருக்கலாம் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில், முதல் நபராக 50 ஆயிரம் பணப்பெட்டியுடன் 30 செகண்ட்ல ஓடி வந்து பணப்பெட்டியை பெற்றார் முத்துக்குமார். அதைத்தொடர்ந்து, ராயன் ரூ 2 லட்சம் பெட்டியுடன் வீட்டிற்குள் வந்தார்.
வெளியேற்றப்பட்டார்: இதையடுத்து, நேற்று ஜாக்குலின் 8 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுக்க சென்றார். ஆரம்பத்தில் வேகமாக ஓடிய ஜாக்குலின், திரும்பி வரும் போது 2 நிமிடம் தாமதமாக வந்துவிட்டதால், இந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 102 நாட்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்த ஜாக்குலின், வெளியேற்றப்பட்டதில், நியாயமே இல்லை என்று இணையத்தில் அவரின் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பாவம் ஜாக்குலின்: மேலும், பிக் பாஸ் டீம் முத்துக்குமரனுக்கு விரித்த வலையில் ஜாக்குலின் விழுந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அதாவது, முத்துக்குமரன், பணப்பெட்டியை எடுக்க ஓடும் போது, அந்த பாதையில் தண்ணீர் மற்றும் சகதி இருந்தது. இதில், அவர் வழுக்கி விழுந்துவிட்டால், இந்த போட்டியில் இருந்து அவரை வெளியேற்றிவிடலாம் என் பிக் பாஸ் டீம் பிளான் போட்டது. ஆனால், முத்து அதில் ஜெயித்துவிட்டதால், அடுத்தாக ஜாக்குலினை இதில் சிக்க வைத்து அவரை வெளியில் அனுப்பி உள்ளது என இணையத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
கடன் அடைக்க: ஜாக்குலின், விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதே தொலைக்காட்சியில் தேன்மொழி பிஏ என்ற சீரியலிலும் நடித்தார். நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். தற்போது, அவருக்கு சின்னத்திரை, வெள்ளித்திரையில் என எதிலும் படவாய்ப்பு இல்லாததால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், அவருக்கு இருக்கும் கடன் காரணமாகத்தான் அந்த 8 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுக்க ஓடினார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











