கெமி எலிமினேட் ஆனாரா? இல்லை எலிமினேட் செய்யப்பட்டாரா? பேச்சு வேற மாதிரி அடிபடுதே!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளராக வலம் வந்த கெமி திடீரென வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிரடியாக ஆடி வந்த கெமியின் இந்த எலிமினேஷன் நியாயமற்றது என்று ரசிகர்கள் இணையத்தில் காட்டமாக பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக "இது அநியாயம்... அன்ஃபேர் எலிமினேஷன்!" என சமூக வலைதளங்களில் கெமிக்காக பல ஹேஷ்டேக்குகளுடன் இணையவழி போராட்டத்தையே நடத்தி வருகிறார்கள். கெமியை திரும்ப கொண்டு வாருங்கள் என பிக் பாஸ் குழுவுக்கு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற பல விஷயங்கள் ரசிகர்களை கடுப்பேற்றியது. வாரக் கடைசியில் விஜய் சேதுபதி எதை கேள்வி எழுப்புவார், எதை விடுவார் என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் வீக்கெண்ட் நாட்களில் விஜய் சேதுபதி வீட்டிற்குள் நுழைந்ததும் சூடு பிடித்தது! ஒவ்வொரு போட்டியாளரையும் தொடர்ச்சியாக கேள்விகளால் "வறுத்தெடுத்தார்". குறிப்பாக வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த திவ்யா, சாண்ட்ரா, பிரஜன் மூவரையும் மாறி மாறி கேள்விகள் கேட்டு விளாசிவிட்டார். அந்த மூன்று பேரும் பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடிய காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.

Fans Asking There is Any Reason in Behind For Kemi Elimination in Bigg Boss
டாஸ்க் கொடுத்தாலும் சரியாக செய்யாமல், பிக்பாஸ் சொன்னதையும் கேட்காமல் வேலை செய்யாமல் பிக்பாஸை உதாசீனமாக நடத்திய சாண்ட்ரா, திவ்யா இருவரையும் அவர் சரமாரியாக வறுத்தெடுத்தார். அதே நேரம், திவ்யாவுக்கு பால் கொடுக்காததற்காக எஃப்.ஜே-யை கடுமையாக விமர்சித்த பிரஜன், பல இடங்களில் வரம்பு மீறி பேசியது போன்ற தவறுகளை விஜய் சேதுபதி ஒரு பட்டியலாக எடுத்து வந்து மேடையில் படித்துக் காட்டினார். இதெல்லாம் ப்ரோமோவாக வெளியானபோதே, ரசிகர்கள் ஃபயர் விட்டுக் கொண்டு இருந்தார்கள். கடைசியாக எலிமினேஷனின்போது, பிரஜன் மற்றும் கெமி இருந்தபோது பலரும் எதிர்பார்த்தது பிரஜன் எலிமினேட் ஆகிவிடுவார் என்பதுதான்.
Fans Asking There is Any Reason in Behind For Kemi Elimination in Bigg Boss
ஆனால், இந்த வாரம் நடக்கும் எலிமினேஷன் அதிர்ச்சியாக முடிந்தது! பிரஜன் போக வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், சவாலான போட்டியாளரான கெமி திடீரென வெளியேறினார். எந்த டாஸ்க் கொடுத்தாலும் சவாலாக ஏற்று சிறப்பாக முடிப்பவர் கெமி. சக போட்டியாளர்கள் தவறு செய்தால் துணிந்து கண்டிப்பவர். வீட்டில் "நான் என்ன செய்வேன்" என்று உட்கார்ந்து இருக்கும் பலரிடம் இருந்து அவரைத் தேர்ந்தெடுத்து வெளியேற்றியது "அநியாயம் தானே?" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொதித்தெழுந்துள்ளனர்.கெமியின் வெளியேற்றத்தின் பின்னணியில், அவரது பெரிய படத்தில் நடிப்பதற்கான கமிட்மென்ட் உண்மையான காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுதான் உண்மையான காரணமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X