மளிகை கடை... மாவு கடை... ஸ்வீட்டு கடை... விஜய் டிவி சீரியல்களை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
சென்னை : விஜய் டிவி வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமின்றி வித்தியாசமான சீரியல்களுக்கும் பெயர் போனது.
விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
தற்போது இந்த சீரியல்களில் உள்ள ஒற்றுமை குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

வித்தியாசமான நிகழ்ச்சிகள்
விஜய் டிவியில் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், நீயா நானா, பிக் பாஸ் என வித்தியாசமான களங்களுடன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளுக்கும் இதன் சீசன்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். அடுத்தடுத்த சீசன்களுக்காக அவர்கள் கோரிக்கை வைப்பதும் நடந்து வருகிறது.

வித்தியாசமான சீரியல்கள்
இந்நிலையில் சீரியலையும் விட்டு வைக்கவில்லை விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியின் தொடர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். அடுத்தடுத்த பரபரப்பான சம்பவங்களின் மூலம் இந்த தொலைக்காட்சயின் தொடர்கள் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன.

வித்தியாசமான முயற்சிகள்
சீரியல்களிலும் வித்தியாசங்களை புகுத்துவதில் விஜய் டிவி சிறப்பாக காணப்படுகிறது. திடீரென முக்கியமான விஐபிக்களை சீரியல்களில் களமிறக்குவது, சங்கமம் உள்ளிட்டவற்றால் சீரியல் ரசிகர்களை தொடர்ந்து தங்களது சீரியல்களை பார்க்க செய்து விடுகிறது விஜய் டிவி.

ஒரே கான்செப்டில் சீரியல்கள்
இந்த தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மற்றும் ராஜா ராணி என முக்கியமான 4 சீரியல்கள் காணப்படுகின்றன. இவை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடர்களாக உள்ளது. இந்நிலையில் இந்த 4 தொடர்களின் ஒற்றுமை குறித்து நெட்டீசன்கள் தற்போது மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

ஒரே மாதிரியான சீரியல்கள்
இந்த 4 சீரியல்களின் கதைகள் என்னவோ வேறு வேறு தான். இருந்தாலும் தற்போது கதைகளின் போக்கு ஒன்றாக உள்ளது. பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மா மாவுக்கடை வைத்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்சில் அண்ணன்கள் மளிகை கடை வைத்துள்ளனர்.

ஒன்லைனை முடித்துவைத்த ரசிகர்கள்
இதேபோல பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா மசாலா மற்றும் ஹோட்டல் கடை வைத்துள்ளார். இதேபோல ராஜா ராணி 1 சீரியலில் ஹீரோ ஸ்வீட்டு கடை வைத்திருக்கிறார். என ஒரே போடில் மொத்த சீரியலின் ஒன் லைன் ஸ்டோரியையும் முடித்து வைத்துள்ளனர்.

வைரலாகும் ரசிகர்கள் கமெண்ட்ஸ்
ரசிகர்களின் இந்த கமெண்டுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அது மட்டுமில்லாமல் சீரியல் பிரமோ கமெண்ட் செக்ஷனிலும் இந்த கருத்துக்களை பார்க்க முடிகிறது. விறுவிறுப்பான இந்த சீரியல்களில் ஒற்றுமையை கண்டுபிடித்து அதை கலாய்த்து வருவது அந்த சீரியலின் நடிகர், நடிகைகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











