Bigg Boss: பார்வதி கமருதீனை பிக்பாஸே மன்னித்த பிறகு.. அரோராவும் திவ்யாவும் செய்ததை கவனித்தீர்களா?
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நாளை அதாவது, ஜனவரி 18 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய சீசன் என்றாலும், அவ்வப்போது ரசிகர்களை கவர்ந்த பல விஷயங்கள் இந்த சீசனில் நடைபெற்றுள்ளது. அதே நேரத்தில் ரசிகர்களை அதிருப்தியில் ஆளாக்கிய, பெரும்பாலான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த சீசனையே மொத்தமாக முடித்துவிட்டவர் என்று ரசிகர்கள் பலராலும் விமர்சிக்கப்பட்ட போட்டியாளர் என்றால், அது விஜே பார்வதி.
டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்ற போது பார்வதி மற்றும் கமருதீன் இணைந்து சக போட்டியாளரான சாண்ட்ராவை எட்டி உதைத்து காரில் இருந்து கீழே தள்ளினர். இப்படி இவர்களின் இந்த செயல் ரசிகர்கள் அனைவரையும் சக போட்டியாளர்கள் தொடங்கி மற்ற அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இவர்களின் இந்த மோசமான செயலால், இவர்கள் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பட்டார்கள்.

இது சக போட்டியாளர்கள் தொடங்கி, பெரும்பாலான ரசிகர்கள் அனைவருக்கும் சரியான முடிவு என்று கருதினார்கள். கமருதீனின் நெருங்கிய நண்பரான கானா வினோத்திற்கு மனதிற்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், இந்த தண்டனையை கமருதீனுக்கு வழங்கியது சரிதான் என்று அவருமே கருதினார். இப்படி இருக்கையில், இந்த சீசனில் கடைசியில் இந்த சீசன் போட்டியாளர்கள் அனைவரையும் (பார்வதி மற்றும் கமருதீன் தவிர) அமர வைத்து இந்த சீசனின் அழகிய மொமண்ட்களை பெரிய வீடியோவாக பிளாஸ்மா முன்னிலையில் திரையிட்டு காட்டினார்.
மன்னித்த பிக்பாஸ்: அதன் பின்னர் போட்டியாளர்கள் அனைவரின் பெயரையும் தனித்தனியே சொல்லி அனைவருக்கும் வெளி உலக வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது கமருதீன் மற்றும் பார்வதி பெயரையும் சொன்னார் பிக்பாஸ். பிக்பாஸ் அவர்கள் இருவரது பெயரையும் சொன்னதும் போட்டியாளர்கள் பெரும்பாலும் எழுந்து நின்று கைதட்டி பிக்பாஸ்க்கு நன்றி தெரிவித்தார்கள்.

எழுந்திருக்காமல்: ஆனால் போட்டியாளர்களான அரோரா மற்றும் திவ்யா ஆகியோர் மட்டும் எழுந்திருக்காமல், அமர்ந்தபடியே கை தட்டினார்கள். இவர்களின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள், சாண்ட்ராவே மன்னித்து விட்டார். ஆனால் திவ்யாவும் அரோராவும் மன்னிக்கவில்லை போல என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











