சீரியல் கொடுமைகள்: சீரியலில் இனி ஒரே எழவுதான்.. TRP ரேட்டிங்கை ஏற்ற படாதபாடு படும் இயக்குநர்கள்!
சென்னை: நாம் அனைவரும் குரங்கு தொப்பு கவிழ்ldத கதையை கேள்வி பட்டு இருப்போம், அதாவது ஒரு குரங்கு தொப்பியை கவிழ்ந்து வீசினால், அனைத்து குரங்கும் தொப்பியை அவிழ்ந்து வீசிவிடும். அப்படித்தான், தொலைக்காட்சியில் பலர் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கில் இருக்கும் சீரியலில் என்ன நடக்கிறதோ அதை ஈ அடிச்சான் காப்பி போல காப்பி அடித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இந்த தொடரில், பாக்கியலட்சுமி ஒரு குடும்ப பெண். தன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி வருகிறார் என்பதும், குடும்பத்தையும், வேலையையும் சரி சமமாக எப்படி பார்த்துக்கொள்கிறாள் என்பதையும் சொல்லி கதையை அழகாக நகர்த்தி செல்வதால், இந்த சீரியல் அனைவருக்கும் பிடித்தமான சீரியலாக உள்ளது.

பாக்கியலட்சுமி: 1000 எபிசோட்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கும் இந்த சீரியலில். பாக்கியாவின் முடிவுகளுக்கும் எப்போதும் துணையாக இருந்த, பாக்கியாவின் மாமனார் ராமமூர்த்தி உயிரிழந்துவிட்டார். தனது 80வது வயது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய அவர், அடுத்த நாள் காலையில் எழவே இல்லை. அப்படியே உயிர் பிரிந்ததுபோல் காட்சி படுத்தப்பட்டிருந்தது. இறுதியாக பாக்கியாவிடம் மனம் விட்டு கண்கலங்கி பேசினார். ராமமூர்த்தி இறந்தது ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

என்ன கொடுமை சார்: ராமமூர்த்தியின் இறப்பிற்கு கோபிதான் காரணம் என்றும், கோபி இறுதி சடங்கை செய்யக்கூடாது ஈஸ்வரி சொல்லிவிட்டதால், அனைத்து சடங்குகளையும் மகன் ஸ்தானத்தில் இருந்து பாக்யா செய்து முடித்தால். கோபி இறுதி சடங்கு செய்கூடாது என்றால், கோபியின் மகன்களை செய்ய சொல்லி இருக்கலாம். அதைவிட்டு விட்டு, சாவில் இருந்து புரட்சி செய்வது போல, பாக்கியா அனைத்து சடங்குகளையும் செய்து முடித்தால்,ராம மூர்த்தி உயிரிழந்த சீனை வைத்து கிட்டத்தட்ட இரண்டு வாரத்திற்கு ஓட்டி டிஆர்பி ரேட்டிங்கை எகுற வைத்துவிட்டார் இயக்குநர்.
போட்டுத்தள்ளு: விஜய் டிவிக்கு சரியான போட்டியாக இருக்கும் ஜீ தொலைக்காட்சியில், உங்க சீரியலில் மட்டும் தான் எழவு விழுமா என்று அந்த தொலைக்காட்சியில் நன்றாக சென்று கொண்டு இருக்கும் அண்ணா சீரியலில் முக்கியமான ஒரு கேரக்டரை கொன்னு புதைச்சிட்டாங்க. அந்த சீரியலில், சௌந்தரபாண்டியன் ஜெயிலுக்கு போவது, ரத்னாவின் கல்யாணம் என்று தான் கதை சென்று கொண்டு இருந்தது. ஆனால், குரங்கு தொப்பியை அவிழ்ந்த கதையாக, அண்ணா சீரியலில், ரைட்டில் இன்டிகேட்டர் போட்டு லெப்டில் ஆட்டோ ஓட்டுவது போல, 20 வருஷமான செய்யாத குற்றத்திற்காக குழந்தைகளை பிரிந்து ஜெயிலில் இருந்து வந்த சூடாமணி போட்டுத்தள்ளிட்டாங்க.

இனி ஒரே எழவுதான்: இதைப்பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ் ,பாவம் அந்த சூடாமணி அம்மா ஜெயிலில் இருந்து வந்து, இப்போத்தான் குழந்தைகளோடு சந்தோஷமா இருக்கு அது புடிக்கலையா உனக்கு எனறும், சீரியல் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்றும் இயக்குநரை கழுவி உற்றினார்கள். இந்த சீரியலிலும் மகன், மகளை வைத்து சடங்கு என இரண்டு வாரம் முழுக்க அழுகாச்சியா போச்சு. இப்படி டிஆர்பி ரேட்டிங்கிற்காக இயக்குநர்கள் மாறி மாறி ஆட்களை போட்டுத்தள்ளி வருகின்றனர். இதைப்பார்த்து இன்னும் எத்தனை சீரியலில் எழவெடுக்கப்போறாங்க என்று தெரியவில்லை என சீரியல் பிரியர்கள் பயத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











