ப்பா.. செம்ம பர்ஃபாமன்ஸ்.. ரவுடி பேபி பாடலுக்கு பட்டையை கிளப்பும் கேபி அன்ட் ஆஜித்!
சென்னை: பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கேபியும் ஆஜித்தும் ரவுடி பேபி பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள புரமோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.
விஜய் டிவியில் கடந்த மே மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடிகள். இந்நிகழ்ச்சியில் இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
வயது வித்தியாசம் இன்றி அனைத்து பிரபலங்களும் ஜோடி ஜோடியாக பங்கேற்று அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் நகுல் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

ரம்யா கிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு
இந்த நிகழ்ச்சியில் தான் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ஜோடியாக ஆட்டம் போட்டார் வனிதா. ஆனால் ரம்யா கிருஷ்ணன் குறைந்த மதிப்பெண்கள் வழங்கியதால் ஆத்திரமடைந்த வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும் தன்னை பார்த்து ரம்யா கிருஷ்ணன் பொறாமைப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும்
சமீபத்தில் இவ்விவகாரம் குறித்து பேசிய நகுல், வனிதா தங்களை சைட்டில் வைத்து தரக்குறைவாக பேசியதாக குற்றம்சாட்டினார். அம்மன் வேஷம் போட்டு தங்களை அசிங்கமாக பேசினார் என்றும் தான் பேசியதற்கு நடிகை வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் தெரிவித்திருந்தார்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆனால் அதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்த நடிகை வனிதா, ஜட்ஜ்கள் தன்னை பேசியதை ரீ ஷூட் செய்து எடிட் செய்து போட்டுள்ளார்கள் என்று கூறினார். மேலும் வேலையில்லாத முட்டாள்களின் உளறல்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை என்றார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைக்கட்டி வருகிறது.

ரவுடி பேபி பாடலுக்கு ஆட்டம்
அந்த வகையில் இந்த வாரத்திற்கான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் புரமோ இன்று வெளியாகியுள்ளது. அதில் மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு பிக்பாஸ் பிரபலங்களான ஆஜித்தும் கேபியும் செம்ம ஆட்டம் போட்டுள்ளனர். இருவருமே போட்டி போட்டுக் கொண்டு பக்கா பர்ஃபாமன்ஸ் கொடுத்துள்ளனர்.

மெய் மறந்து ரசிக்கும் ரம்யா கிருஷ்ணன்
அவர்கள் ஆடுவதை நிகழ்ச்சியின் நடுவரான நடிகை ரம்யா கிருஷ்ணன் மெய் மறந்து ரசிக்கிறார். சக போட்டியாளர்களும் இருவரின் நடனத்தை பார்த்து கைகளை தட்டி ஆரவாரம் செய்கின்றனர். இந்த புரமோவை பார்த்த ரசிகர்களும் இருவரையும் பாராட்டி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கேபி டான்ஸ் - ரசிகர்கள் ரியாக்ஷன்
பிக்பாஸ் ஜோடிகள் புரமோவில் கேபியும் ஆஜித்தும் ஆடுவதை பார்த்த இந்த நெட்டிசன், கேபி டான்ஸ் பார்த்து ரசிகர்கள் ரியாக்ஷன் என ராமர் திரும்பி பார்க்கும் போட்டோவை ஷேர் செய்து குறிப்பிட்டுள்ளார்.

வாவ்.. ஆன் லூப் மோட்
கேபி மற்றும் ஆஜித் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆடுவதை பார்த்த இந்த நெட்டிசன், வாவ்... ஆகா பேபிஸ்... ஆன் லூப் மோட் என புரமோவை பார்த்து வாயை பிளந்துள்ளனர்.

ஆஜித் வேற லெவல் பர்ஃபாமன்ஸ்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆஜித் பர்ஃபாமன்ஸை பாராட்டியுள்ளார். ஆஜித் வேற லெவல் பர்ஃபாமன்ஸ்.. செம்ம செம்ம என புகழ்ந்துள்ளார்.

கேபி ரியாக்ஷனுக்கு பாராட்டு
பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் கேபியின் ரியாக்ஷனை பாராட்டியுள்ளார் அவருடைய எக்ஸ்பிரஷனை முழுவதுமாக காண காத்திருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











