யுவாவிற்கும் மீராவிற்கும் நடக்குமா திருமணம்? எகிரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சென்னை : சன் டிவியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது கண்ணான கண்ணே சீரியல்.

கடந்த ஒரு வாரகாலமாக இந்த சீரியல் திருமண கொண்டாட்டத்தில் களைகட்டி வருகிறது.

இந்நிலையில் சீரியலில் யுவா மற்றும் மீராவிற்கு திருமணம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

தனுஷ் இயக்கம்

தனுஷ் இயக்கம்

சன் டிவியில் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி முதல் இரவு 8.30 மணிக்கு தினந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வருகிறது கண்ணான கண்ணே தொடர். தனுஷ் இயக்கத்தில் பிரித்விராஜ், நிமிஷிதா, ராகுல் ரவி மற்றும் நித்யா தாஸ் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவா -மீரா காதல்

யுவா -மீரா காதல்

கடந்த ஒரு வாரமாக கல்யாண கலாட்டாக்களில் இந்த தொடர் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. யுவாவிற்கும் பிரீத்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமண கெண்டாட்டத்தை என்ஜாய் பண்ண முடியாத அளவில் யுவா - மீரா காதல் ரசிகர்களை தடை செய்துள்ளது.

புதுவரவு சந்தோஷ்

புதுவரவு சந்தோஷ்

நேற்றைய எபிசோடியில் தாலிகட்டும் தருணம் வரையில் வந்த திருமணத்தில் மேடையில் பிரீத்திக்கு அருகில் இருக்கும் மீரா கழுத்தில் தாலி கட்டப் போகிறார் யுவா. தாலியை கட்டிவிட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டிக் கொண்ட நேரத்தில் சீரியலில் ஒரு ட்விஸ்ட்டை ஏற்படுத்துகிறார் சந்தோஷ்.

காதலை மறைத்த பிரீத்தி

காதலை மறைத்த பிரீத்தி

கல்யாணத்தை நிறுத்தும் அவர், தானும் பிரீத்தியும் காதலிக்கும் விஷயத்தை சபையில் தெரிவிக்க இதனால் கல்யாணத்தில் குழப்பம் ஏற்படுகிறது. தொடர்ந்து தான் மீராவின் திருமணத்திற்காகவே தனது காதலை மறைத்ததாக பிரீத்தி கூறுவதோடு நேற்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது.

Recommended Video

Manimegalai, KPY Bala, Chaithra பற்றிய தெரியாத தகவல்கள்! | Thirumathi Selvam, Anchor
மறுக்கும் ப்ரித்விராஜ்

மறுக்கும் ப்ரித்விராஜ்

இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் ப்ரமோவில் ப்ரித்விராஜ் பிரீத்தியிடம் யுவாவை திருமணம் செய்ய வற்புறுத்துகிறார். அவர் மறுக்க மற்றவர்கள் மீராவை யுவாவுடன் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்கு தடை போடுகிறார் பிரித்வி. இன்றைய எபிசோடில் மேலும் பரபரப்பான காட்சிகளுக்கு இந்த ப்ரமோ உத்தரவாதம் தருகிறது. 8.30 மணிவரை காத்திருப்போமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X