இதையாவது கண்டிப்பீங்களா? இல்ல எனக்கும் நடந்திருக்குன்னு எஸ்கேப் ஆயிடுவீங்களா கமல்?

Recommended Video

Bigg Boss 3 Tamil: Promo 2 : Day:40 : Chithappu saravanan Vs Cheran : மரியாதை குறைவாய் பேசிய சரவணன்

சென்னை: இயக்குநர் சேரனிடம் நடிகர் சரவணன் கொஞ்சமும் நாகரீகமில்லாமல் நடந்துகொண்டதை கமல் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள சேரனை ஆரம்பத்தில் இருந்தே டார்கெட் செய்து வருகிறார் சரவணன். சாண்டிக்கும் சேரனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாத போதும் சாண்டி, சேரனை கார்னர் செய்து வருகிறார்.

இப்படி தானும் சேரனை கார்னர் செய்து பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களையும் சேரனுக்கு எதிராக திருப்பிவிட்டு வருகிறார் சரவணன். இதுநாள் வரை சேரன் குறித்து மற்றவர்களிடமும் பின்னாலும் தவறாக பேசி வந்த சரவணன், இன்று முகத்திற்கு நேராகவே பேசி கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

பின்னால் பேசியதில்லை

பின்னால் பேசியதில்லை

தனது வயதுக்கும் அனுபவத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்கிறார் சரவணன். சேரன் இதுவரை சரவணன் குறித்து எதுவும் முதுகுக்கு பின்னாலும் பேசியதியல்லை தவறாகவும் பேசியதில்லை.

லூசு அப்படிதான் பேசுவேன்

லூசு அப்படிதான் பேசுவேன்

இந்நிலையில் இன்று சேரனை தரக்குறைவாக பேசி சண்டை போட்டுள்ளார். போயா, வாயா என்றவர் நீ, போ,வா, போடா, வாடா என சகட்டுமேனிக்கு பேசிவிட்டார். லூசு என்றும் அப்படிதான் பேசுவேன் என்றும் திமிரை காட்டினார் சரவணன்.

அச்சமடைந்த ஹவுஸ்மேட்ஸ்

அச்சமடைந்த ஹவுஸ்மேட்ஸ்

அதோடு நிறுத்தினாரா? இல்லை உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு அடிக்கப்போவது போல் சேரனிடம் பாய்ந்தார் சரவணன். இதனை பார்த்து அச்சப்பட்டது சேரன் மட்டும் அல்ல மொத்த ஹவுஸ்மேட்ஸும் தான்.

போராட்டம் நடத்தாத குறையாக

போராட்டம் நடத்தாத குறையாக

சரவணனின் உண்மை முகத்தை பார்த்து கொந்தளித்து போயுள்ளனர் மக்கள். சரவணனை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்கள் என்று போராட்டம் நடத்தாத குறையாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இல்ல எஸ்கேப்பாயிடுவாரா?

இல்ல எஸ்கேப்பாயிடுவாரா?

மேலும் இதையாவது நடிகர் கமல்ஹாசன் கண்டிப்பாரா? இல்லை இதுபோல் எனக்கும் நடந்திருக்கு என்று சிரித்துக்கொண்டே எஸ்கேப்பாகி விடுவாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சர்ச்சையான பேச்சு

சர்ச்சையான பேச்சு

ஏற்கனவே பேருந்தில் பெண்களை உரசியதாக பெருமையாக மார்தட்டி சொன்னார் சரவணன். அப்போதே சிரித்துவிட்டு நைசாக கடந்து சென்றுவிட்டார் கமல். அதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தன. அந்த விவகாரம் சர்ச்சையானது.

கமல் கண்டித்ததே இல்லை

கமல் கண்டித்ததே இல்லை

ஆடை விஷயத்தில் மது கூறியதை மட்டும் உன்னிப்பாக கவனித்து கண்டனம் தெரிவித்த கமல், சரவணன் விஷயத்தில் மட்டும் ஏன் கண்டும் காணாமல் உள்ளார். பலமுறை சரவணன், சேரன் குறித்தும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் குறித்தும் தரக்குறைவாக பேசியுள்ளார். அவரை இதுவரை கமல் கண்டித்ததே இல்லை.

காத்திருப்போம் நாளை வரை

காத்திருப்போம் நாளை வரை

இந்நிலையில் தமிழுக்கும் தமிழ் சினிமாவுக்கும் பெருமை சேர்த்த ஒரு இயக்குநரை அடிக்க பாய்ந்துள்ளார் சரவணன். இந்த முறையாவது அவரை கண்டிப்பாரா கமல்? அல்லது எஸ்கேப்பாகி விடுவாரா? அல்லது பிக்பாஸை வைத்தே சேரனிடம் மன்னிப்பு கேட்க சொல்வாரா? காத்திருப்போம் நாளை வரை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X