ஜாக்குலினை ஆபாசமாக பேசிய ராணவ்.. பிரதீப் ஆண்டனியை போல ரெட் கார்ட் கொடுங்க.. கொதிப்பில் ரசிகர்கள்!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி கடந்த மாதம் 6ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 53வது நாளில் என்ட்ரிகொடுத்துள்ளது. மொத்தமாக இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் மட்டுமே போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்ற வகையில் இந்த நிகழ்ச்சியின் பாதி போட்டி நடந்து முடிந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரவீந்திரன், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் எவிக்ட் ஆன நிலையில் ஒருவாரம் நோ எவிக்சன் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வைல்டு கார்ட் என்ட்ரியாக ஆறு போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் நுழைந்த நிலையில் இவர்களில் ரியா மற்றும் வர்ஷினியும் எவிட் செய்யப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி: விஜய் டிவியின் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கடந்த மாதம் 6ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட்டாக நடிகர் விஜய் சேதுபதி அதிரடி காட்டி வருகிறார். நிகழ்ச்சியில் இருந்து ரவீந்திரன், தர்ஷா குப்தா, சுனிதா உள்ளிட்டவர்கள் இதுவரை எவிக்ட் ஆகியுள்ளனர். மேலும் ஒரு வாரம் எவிக்ஷன் இல்லாத நிலையில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக கடந்த தீபாவளியையொட்டி ஆறு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் நுழைந்தனர். இந்நிலையில் இவர்களில் ரியா மற்றும் வர்ஷினியும் அடுத்தடுத்து எவிட் ஆகியுள்ளனர்.
பொம்மை டாஸ்க்: இந்நிலையில் கடந்த இரு தினங்களாக இந்த நிகழ்ச்சியில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொம்மையை எடுக்கும் போட்டியில் அடுத்தடுத்து தர்ஷிகா மற்றும் ஜாக்குலின் இடையே பிரச்சினை ஏற்பட்டது. தொடர்ந்து விஷால் மற்றும் ஜாக்குலின் இடையிலும் பிரச்சினை வெடித்தது. தெளிவாக இரு என்று விஷால், ஜாக்குலினிடம் கூற, நான் தெளிவாத்தான் இருக்கேன் என்று அவர் பொங்கியதை பார்க்க முடிந்தது. இதையடுத்து ராயன் உள்ளிட்டவர்கள் ஜாக்குலினை சமாதானப் படுத்தினர். இதையடுத்து நிகழ்ச்சியிலிருந்து ஜாக்குலின், சௌந்தர்யா, தீபக் உள்ளிட்டவர்கள் இந்த டாஸ்கில் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினர்.
ஜாக்குலினை ஆபாசமாக பேசிய ராணவ்: நிகழ்ச்சியில் ஜெப்ரி உள்ளிட்டவர்கள் விளையாடி வந்த நிலையில் இன்றைய தினம் வெளியேறிய போட்டியாளர்களும் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களின் பொம்மையை எடுக்கும் டாஸ்கை தடுக்கும் வகையில் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் நுழைந்து மற்றவர்களின் செயல்களை தடுக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதனிடையே ரானவ், ஜெப்ரியை பிடிக்காமல் அவரது பொம்மையை பிடித்ததால் ராயன் சண்டைக்கு சென்றார். இதையடுத்து ஜாக்குலினும் இதை கேள்வி கேட்க அவரை மூடிக்கொண்டு போ என்று என்பதாக ஆபாசமாக பேசினார் ராணவ்.
ராணவிற்கு ரெட் கார்ட் கொடுக்கப்படுமா?: இதனால் ஜாக்குலின் மட்டுமில்லாமல் சௌந்தர்யாவும் கொந்தளித்தார். தேவையில்லாமல் பேசுவதாக ராணவை அவர்கள் கண்டித்தனர். தொடர்ந்து பேச்சை கவனத்துடன் பேச வேண்டும் என்று கொந்தளிப்புடன் சௌந்தர்யா பேச, அவரிடமும் அதே வார்த்தைகளை ராணவ் பயன்படுத்தினார். இதன் ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் இதை பார்த்த ரசிகர்கள் ராணவுக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர் ஜாக்குலினை பார்த்து ஆபாசமாக பேசிய நிலையில் அவருக்கு கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனிக்கு கொடுத்தது போல ரெட் கார்ட் கொடுக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோபத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











