வீ ஆர் த பாய்ஸ்.. ஊ.. ஊ.. சாண்டி உங்களுக்கு இது தேவைதான்.. கேம் ஸ்டார்ட்டடு! இதுதான் கவின்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் பாய்ஸ் கேங்கிற்குள் ஏற்பட்டுள்ள மோதலால் பார்வையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
பிக்பாஸ் போட்டியாளர்களில் கவின், சாண்டி, தர்ஷன், முகென், லாஸ்லியா ஆகிய ஐந்து பேர் மட்டும் தனியாக ஒரே மாதிரி டிஷர்ட்டை போட்டுக்கொண்டு எப்போதும் வீ ஆர் த பாய்ஸ் ஊஊ என சொல்லிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டிருப்பது இன்று வெளியான இரண்டாவது புரமோவில் தெரியவந்துள்ளது. லாஸ்லியாவுக்காக கவின், சாண்டியிடம் எகிறுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சாண்டிக்கு தேவைதான்
"தனக்கு வந்தா தான் தெரியுமாம் தலைவலியும் காய்ச்சலும்" , சாண்டி இதுக்கு தகுதியானவர்தான் நீங்க. கவின தலையில தூக்கிவச்சு ஆடுனீங்க எத்தனை வருஷ ஃபிரன்ட்ஷிப்? அந்த கிரீஸ் டப்பாவை எப்பிடி உதைச்ச? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
உண்மையான ஆட்டம்
லாஸ்லியாவை கேப்டனாக்கிய தர்ஷனுக்கு ஹேட்ஸ் ஆஃப்.. உண்மையான ஆட்டம் ஆரம்பம்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
வலித்திருக்கும்
இந்த கேங் மற்றவர்களை கிண்டல் பண்ணும் போது இப்படித்தானே அவர்களுக்கும் வலித்திருக்கும். என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அடுத்தவர்களுக்கு வந்தா ஜாம்?
உங்களுக்கு வந்தா ரத்தம்.. அடுத்தவர்களுக்கு வந்தா ஜாம்? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
லாஸ்லியாவின் குணம்
இப்போ வந்த லாஸ்லியாவுக்காக 5 வருஷத்து நண்பனை ஒரு செகன்ட்ல தூக்கி போட்டுட்டியே கவின். "புண் பட்டு நின்றதடா நண்பன் மனம் அதை கண்டுக்காமல் போவது இந்த அகம்பிடிச்ச லாஸ்லியாவின் குணம்" என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
கேட்டுக்கப்பா சாண்டி
அப்ப..யாரையுமே காயப்படுத்தாத நல்ல மனுசன் சொல்லிட்டாரு.. கேட்டுக்கப்பா சாண்டி என்கிறார் இந்த நெட்டிசன்.
சாண்டிக்கு புரியனும்
லூஸ்லியாவுக்காக தன் நண்பனையே குறை கூறிய தன்னலமற்ற தியாக செம்மல் கவின் அவர்கள்
சாண்டி அவனுக்காக எவ்ளோ பேசியிருப்பான்
இப்பயாவது சாண்டிக்கு புரியனும் என்கிறார் இந்த நெட்டிசன்.
கேங்குக்கு சங்கு
வீ ஆர் த பாய்ஸ் ஊ.. ஊ.. என்று கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்
உள்கட்சி பூசல்
கக்கூஸ் கேங்கில் உள்கட்சி பூசல்!! என்று டிவிட்டியிருக்கிறார் இவர்.
கவின் கேரக்டர்
இதுதான் கவின் கேரக்டர், ஃபிரண்ட்ட விட்டுக்கொடுத்துட்டு பொண்ணுக்கு சாதகமா பேசுவான். இதை இதோட இரண்டாவது முறை என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











