பெரிய மனுஷி பெரிய மனுஷிதான்யா.. அனைவரையும் அனுசரித்து போகும் ஃபாத்திமா பாபு!

Recommended Video

Bigg Boss 3 Tamil: முதல் போட்டியாளர் பாத்திமா பாபு | Bigg Boss 3 Contestants

சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஃபாத்திமா பாபு அனைவரிடமும் நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் வயதில் மூத்தவர்கள் என்றால் மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு ஆகியோர்தான். அவர்களுக்கு அடுத்தபடியாக சரவணன், சேரன் மற்றும் வனிதா உள்ளனர்.

இதில் வனிதாவின் லட்சனம் ஏற்கனவே வெட்டவெளிச்சமாகிவிட்டது. வனிதா என்றாலே சண்டை போடுவார் என்பது முன்னரே தெரிந்த விஷயம் தான் என்றாலும் பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்துகொள்ளும் விதம் அதனை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.

அழ வைத்த மோகன்

அழ வைத்த மோகன்

அடுத்தபடியாக மோகன் வைத்யா அவர் அடிக்கடி கோப படுகிறார். மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவராக உள்ளார். நேற்று சாண்டி மற்றும் சரவணனிடம் கோபித்துக்கொண்ட அவர் இன்று தர்ஷனை மிகவும் காயப்படுத்தி பேசி அழ வைத்து விட்டார்.

நன்மதிப்பை பெறும் சேரன்

நன்மதிப்பை பெறும் சேரன்

அடுத்து சேரன், மீராவிடம் சாக்ஷியும் அபிராமியும் நடந்துகொண்ட விதம் சரியில்லை என சாக்ஷிக்கு அட்வைஸ் செய்து நல்வழிப்படுத்தினார். தேவையில்லாமல் பேசாமல், வேண்டிய நேரத்தில் நச்சென பேசி நன்மதிப்பை பெற்று வருகிறார்.

இதுவரை ஒன்றும் இல்லை

இதுவரை ஒன்றும் இல்லை

அவரை தொடர்ந்து நடிகர் சரவணன் அவரை பற்றியும் குறையென சொல்லும் அளவுக்கு இதுவரை ஒன்றும் இல்லை. குடும்பத்தாரால் ஏமாற்றப்பட்டு விரக்தியில் உள்ளார் மனிதர். வீட்டில் சண்டைகள் வராமல் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.

கூலாக சரி செய்யும் ஃபாத்திமா

கூலாக சரி செய்யும் ஃபாத்திமா

இவர்களை தொடர்ந்து ஃபாத்திமா பாபு. அமைதியாக எல்லா சூழ்நிலையையும் கையாண்டு வருகிறார். எப்படி பட்ட பிரச்சனையும் கூலாக சரி செய்து வருகிறார்.

குடும்பத்தினருக்கு அட்வைஸ்

குடும்பத்தினருக்கு அட்வைஸ்

மீரா - வனிதா சண்டையின் போதும் கூட அமைதியாக இருந்த ஃபாத்திமா பாபு, அழுத மீராவுக்கு ஆறுதல் கூறியதோடு, கேமராவின் முன்பு வந்து உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் நீங்கள் கவலைப்படாத அளவுக்கு பார்த்துக்கொள்கிறேன் என மீராவின் குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார்.

கட்டியணைத்து ஆறுதல்

கட்டியணைத்து ஆறுதல்

நேற்றும் மீரா அழுத போத அனைத்து அவருக்கு ஆறுதல் கூறியதோடு அட்வைஸ் செய்தார் ஃபாத்திமா பாபு. மேலும் பிக்பாஸ் டாஸ்க்கின் போது தங்களின் சொந்தக்கதை ஹவுஸ் மேட்ஸ் பகிர்ந்த போது கண்ணீர் விட்டு அழுத ஃபாத்திமா பாபு, அவர்களை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

செய்த தவறு குறித்து..

செய்த தவறு குறித்து..

மேலும் ரேஷ்மாவின் கதையை கேட்ட ஃபாத்திமா பாபு பெண்களை கஷ்டப்படுத்தாதீங்கடா, அவர்களுக்கு உங்களை போல உடல் வலிமை இல்லை என்று கூறி கலங்கினார். இன்றைய எபிசோடிலும் கூட தர்ஷனை காயப்படுத்திய மோகன் வைத்யாவுக்கு மிக அமைதியாக தர்ஷனின் நிலைமை குறித்தும் மோகன் வைத்யா செய்த தவறு குறித்தும் எடுத்து கூறினார்.

வரவேற்பு பெறும் ஃபாத்திமா

வரவேற்பு பெறும் ஃபாத்திமா

ஃபாத்திமா பாபுவின் அனைவரையும் அனுசரித்து செல்லும் இந்த போக்குக்கு ரசிகர்களிடயே வரவேற்பு எழுந்துள்ளது. மிக பக்குவமாக ஒவ்வொரு சூழ்நிலையையும் கையாண்டு வருகிறார் என சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X