அம்மா அபி.. பிக்பாஸ் வீட்டுல இன்னும் 3 பேர் மிச்சமிருக்காங்க! அவங்கக்கிட்ட எப்போ சொல்லப்போறீங்க?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் அபிராமி முகெனிடம் அந்த வார்த்தையை கூறிவிட்டார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்தில் கவின் மீது காதல் கொண்டார் அபிராமி. தனது காதலையும் கவினிடம் கூறினார்.
ஆனால் கடலை பார்ட்டி கவின், காதலெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று அபிராமியின் காதலை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் சாக்ஷியை காதலித்தார் கவின்.

முகெனை வைத்து ஆறுதல்
பின்னர் அந்தக் காதலை முறித்துக்கொண்டு லாஸ்லியாவுடன் ஒட்டி உறவாடி கடலை போட்டு போட்டு வருகிறார் கவின். கவினால் காயப்பட்ட தனது மனசுக்கு முகெனை வைத்து மருந்து போட முயற்சி செய்தார் அபிராமி.

அடைந்தே தீருவேன்
அன்புக்காக ஏங்கும் முகெனை அதை வைத்தே மடக்கப் பார்க்கிறார் அபிராமி. முகென் தனக்கு காதலி இருக்கிறார் என்று கூறியும், திருந்தாத அபிராமி முகெனை அடைந்தே தீருவேன் என்ற மனநிலையிலேயே இருக்கிறார்.

ஐ லவ் யூ
முகென் பல முறை நமக்குள் இருப்பது நட்புதான் என்று கூறியும் அபிராமி கேட்பதாக இல்லை. இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் அபிராமி, முகெனிடம் ஐ லவ் யூ என்று கூறிவிட்டார். நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் அதான் நான் சொல்லி விட்டேனே என்றும் காதல் வசனம் பேசுகிறார்.

கட்டிப்பிடித்து முத்தம்
ஏற்கனவே கவினை காதலித்து பெயரை கெடுத்துக்கொண்டார் அபிராமி. போதா குறைக்கு இளைஞர் ஒருவரை கட்டிப்பிடித்து யூ ஆர் மைன் என அபிராமி பதிவிட்டிருக்கும் போட்டோவும் சமூக வலைதளத்தில் வைரலானது.
3 பேர் மிச்சமிருக்காங்க
அபிராமி காதல் காதல் என அலைவதால் காண்டாகியுள்ள ரசிகர்கள், உனக்கு வெட்கமே இல்லையாமா என்றும், இன்னும் பிக்பாஸ் வீட்டில் சாண்டி, தர்ஷர், சேரன் ஆகியோர் மட்டும்தான் உள்ளனர், அவர்களிடமும் ஐ லவ் யூ சொல்லிவிடு என்றும் திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











