ஏற்கனவே விஜய் டிவி வாங்கிக்கட்டுது.. இதுல கஸ்தூரிக்கு இந்த பொழப்பு தேவையா?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கஸ்தூரி, தர்ஷனையும் ஷெரினையும் கோர்த்துவிடுவதை ரசிகர்கள் துளியும் விரும்பவில்லை.

இன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் இந்த வாரம் மீண்டும் வில்லன், ஹீரோ, ஜீரோ விளையாடுகின்றனர். ஆனால் இந்த வாரம் போர்டில் எழுத வேண்டாம்.

எல்லோர் கையிலும் ரோஜாப்பூ மாலையை கொடுத்துள்ளனர். கஸ்தூரி டர்னின் போது, ரோஜா பூ மாலையை கையோடு கொண்டு வந்த அவர் தர்ஷனையும் ஷெரினையும் அழைத்து இவர்கள் இருவரும் மாலை மாற்றி கொண்டால் நல்லாருக்கும் என கூறுகிறார்.

என் ஹீரோ நீங்க சார்

என் ஹீரோ நீங்க சார்

மேலும் ஷெரினுக்கு தர்ஷன் ஹீரோ, தர்ஷனுக்கு ஷெரின் ஹீரோயின் என்று கூறுகிறார் கஸ்தூரி. அப்போது குறுக்கிடும் கமல், பாத்தீங்களா உங்க ஹீரோவை இன்னும் சொல்லவில்லை என்கிறார். உடனே சற்றும் யோசிக்காமல் என் ஹீரோ நீங்க சார் என கமலை பார்த்து கூறுகிறார்.

கண்டன பதிவுகள்

கண்டன பதிவுகள்

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது என சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டித்து கருத்துகள் பதியப்பட்டு வருகின்றன.

குமுறும் மக்கள்

குமுறும் மக்கள்

பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள ஆண்கள் பெண்களும் ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, காதலிப்பது என இருந்து வருகின்றனர். இதனால் குடும்பத்துடன் நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என மக்கள் குமுறி வருகின்றனர்.

திட்டும் மக்கள்

திட்டும் மக்கள்

இந்த வேலை எதற்கு உனக்கு என விஜய் டிவியையும் பிக்பாஸையும் கழுவி ஊற்றி வருகின்றனர். தகாத வார்த்தைகளாலும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

வேற மாதிரி

வேற மாதிரி

ஏற்கனவே தர்ஷனும் ஷெரினும் நெருக்கமாக பழகி வருகின்றனர். ஒருவருக்கொருவர் ஊட்டி விடுவதும், தொட்டு தொட்டு பேசுவதும் என வேற மாதிரியாக போய் கொண்டிருக்கிறது.

எதுக்கு இந்த பொழப்பு?

எதுக்கு இந்த பொழப்பு?

இந்நிலையில் கஸ்தூரி, அவர்கள் இருவரையும் மாலை மாற்றிக்கொண்டால் ரொம்ப பொருத்தமாக இருக்கும் என கூறுகிறார். இதனை பார்த்த மக்கள் உனக்கு எதுக்கு இந்த பொழப்பு? இந்த வேலை செய்யதான் இங்கு வந்தாயா என கஸ்தூரியை வசை பாடி வருகின்றனர்.

குண்டுபோடதான் வந்திருக்கு

குண்டுபோடதான் வந்திருக்கு

தர்ஷனுக்கு காதலி இருப்பது ஊரறிந்த விஷயம். இந்நிலையில் கஸ்தூரி இப்படி பேசி, மாலை மாற்றிக் கொள்ள சொன்னால் அதனை பார்க்கும் ஷனம் ஷெட்டி வருத்தப்படமாட்டாரா? பிக்பாஸ் வீட்டில் குண்டு போடவே கஸ்தூரியை அனுப்பி வைத்திருக்கிறார் போல இந்த பிக்பாஸ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X