பாக்கியலட்சுமியின் டாஸ்க் நிறைவேறுமா... ட்ரெண்டிங்கில் ரசிகர்கள் ஆதரவு!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக உள்ளது பாக்கியலட்சுமி.

கடந்த சில வாரங்களில் இந்த தொடரின் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் நடந்ததையடுத்து டிஆர்பியிலும் முன்னேறி வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களை அடுத்தடுத்த வாரங்களில் இந்த தொடர் பின்னுக்கு தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்த தொடரில் சுசித்ரா ஷெட்டி லீட் கதாபாத்திரமான பாக்கியலட்சுமி கேரக்டரில் நடித்து வருகிறார். இவரது அப்பாவித்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் கடந்த சில வாரங்களாக தொடரில் பல்வேறு ட்விஸ்ட்கள் காணப்படுகின்றன.

சிறப்பான கோபி கேரக்டர்

சிறப்பான கோபி கேரக்டர்

இதேபோல இந்தத் தொடரில் கோபியாக நடித்து வரும் சதீஷும் ரசிகர்களிடையே மிகவும் சிறப்பான பாராட்டுக்களை பெற்று வருகிறார். மனைவி மற்றும் காதலி என இருவரையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தாலும் ரசிகர்கள் இவரது நடிப்பை வெகுவாக பாராட்டுகின்றனர். இந்த ரோலில் இவரைத் தவிர யாரும் சிறப்பாக பொருந்த மாட்டார்கள் என்றும் மெச்சுகின்றனர்.

மனைவியை ஏமாற்றும் கோபி

மனைவியை ஏமாற்றும் கோபி

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த தொடரில் பல்வேறு திருப்பங்கள் காணப்படுகின்றன. மனைவிக்கு தெரியாமல் அவரிடமிருந்து டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்கும் கோபி, அவருக்கு தெரியாமலேயே அவரை நீதிமன்றத்தில் கொண்டு சென்று நிறுத்துகிறார்.

கோபியின் பணத்தேவை

கோபியின் பணத்தேவை

மேலும் கோபிக்கு பணத்தேவை ஏற்படும்போது அவரது காதலி ராதிகா பணம் கொடுத்து உதவ முன்வருகிறார். அவரை கோபி திருமணம் செய்யவுள்ளதாக புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனிடையே, பாக்கியலட்சுமியின் மகன் செழியனுக்கு பணத்தேவை ஏற்பட அவர் தன்னுடைய அம்மாவிடம் கோபத்தை காட்டுகிறார்.

அடித்துக்கொள்ளும் அண்ணன் -தம்பி

அடித்துக்கொள்ளும் அண்ணன் -தம்பி

இதையடுத்து அம்மாவிற்கு எழில் சப்போர்ட் செய்ய, அண்ணன் - தம்பி இருவரும் அடித்துக் கொள்கின்றனர். இதை தடுக்கும் பாக்கியலட்சுமி, வீட்டின் பணத்தேவையை பூர்த்தி செய்ய முக்கியமான முடிவை எடுக்கிறார். ஒரே நேரத்தில் 500 பேருக்கு உணவுக்கான ஆர்டரை எடுத்து அதை வெற்றிகரமாக செய்து முடிக்க திட்டமிடுகிறார். இந்தக் காட்சிகள் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பாவியான பாக்கியலட்சுமி

அப்பாவியான பாக்கியலட்சுமி

இந்த தொடரில் மிகவும் அப்பாவியாக காட்டப்படுகிறார் சுசித்ரா ஷெட்டி. அவரது கேரக்டர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது தொடரின் அடுத்தடுத்த ட்விஸ்ட்களால் இந்த தொடரின் டிஆர்பி ரேட்டிங்கும் முன்னேறியுள்ளது. விரைவில் விஜய் டிவியின் முன்னணி தொடர்களான பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களை பாக்கியலட்சுமி முந்தும் என்றும் கூறப்படுகிறது.

ட்விட்டர் ஹேஷ்டேக்குகள்

ட்விட்டர் ஹேஷ்டேக்குகள்

இதனிடையே ட்விட்டர் பக்கத்தில் #MorePowerToBaakiyalakshmi மற்றும் #WeStandWithBaakiyalakshmi போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து விஜய் டிவியும் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளது. நிலைமை இப்படியே போனால் இந்த தொடர் விஜய் டிவியில் முதலிடத்தை பெறுவது கூடிய விரைவில் நடந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X