செம்பருத்தி “விடாது கருப்பு“.. சீரியலை சீக்கிரம் முடிங்க.. கடுப்பான ரசிகர்கள் !

சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை கவர்ந்த தொலைக்காட்சித் தொடர் செம்பருத்தி. ஒரு காலகட்டத்தில் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்த இந்த சீரியல் தற்போது ரம்பமாக அறுத்துக்கொண்டு இருக்கிறது.

ஜீ தமிழில் 2017 ஆம் ஆண்டு முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் காதல் பின்னணியை கொண்ட தொடராகும்.

இந்த சீரியல் தெலுங்கு மொழியில் வெளிவந்த முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவலாகும்.

செம்பருத்தி

செம்பருத்தி

செம்பருத்தி சீரியலின் ஆரம்பத்தில் பார்வதி, ஆதியின் காதல் ரொமான்சை பார்த்து குதூகலமான ரசிகர்கள் இந்த சீரியலை கொண்டாடினார்கள். ஆனால், ஆதியாக மக்கள் மனதில் பதிந்த கார்த்திக் ராஜ் திடீரென சீரியலை விட்டு விலகினார். அதன் பிறகு செம்பருத்தி சீரியலின் டி ஆர் பி ரேட்டிங் பயங்கரமாக அடி வாங்கியது. ட்ரெண்டிங்கில் இருந்த செம்பருத்தி சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டது.

சுவாரசியம் இல்லை

சுவாரசியம் இல்லை

ஆதி கதாபாத்திரத்தில் சீரியலில் களமிறங்கிய தொகுப்பாளர் அக்னி தன் நடிப்பு திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் இடம் பிடித்து சீரியலின் சுவாரசியத்தை கூட்டினார். தற்போது சீரியல் ஓரளவு சுமாராக ஓடிக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும் முன்பு இருந்த சுவாரசியம் இல்லை.

விடாது கருப்பு

விடாது கருப்பு

ஆதி பார்வதிக்கு 3 முறை தாலி கட்டி, கடைசியில் ஒரு வழியாக பார்வதியை மறுமகளாக அகிலாண்டேஸ்வரி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இந்த சீரியல் இறுதி கட்டத்தை எட்டி விட்டது, விரைவில் முடியபோகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், விடாது கருப்பு என்பது போல இந்த சீரியலில் வேறு ஒரு கதையை நுழைத்துள்ளனர்.

தயவு செய்து சீரியலை முடிங்க

தயவு செய்து சீரியலை முடிங்க

அதாவது செம்பருத்தி சீரியல் தற்போது புது கோணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதில் நடிகை யமுனா, ப்ரீத்தா, நடிகர் விஷ்ணு ஆகியோர் புதிதாக இணையவுள்ளனர். இது குறித்த அப்டேட் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. இன்னும் எத்தனை வருஷத்திற்கு இந்த சீரியலை எடுப்பீங்க என்றும்.. தயவு செய்து சீரியலை முடிங்க என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X