கரண்ட் பில் பத்திக்கூட தெரியாதா?இதுல ஜெயிப்பனு சவால் விட்டீங்க..பாக்கியாவை ட்ரோல் செய்யும் பேன்ஸ்!

சென்னை : விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்யலட்சுமி.

இந்த சீரியலில் பாக்யலட்சுமியாக வரும் சுசித்ரா அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். இதனால், இல்லத்தரசிகள் மனதில் தனி இடம் பிடித்து விட்டார் பாக்யா

தற்பொழுது கோபி வீட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில் ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காகவும், அவர் மனதை மாற்றவும் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்.

கோபி செய்த துரோகம்

கோபி செய்த துரோகம்

ஒட்டுமொத்த குடும்பத்திற்காகவே வாழ்ந்த பாக்கியாவால் கணவர் கோபி செய்த துரோகத்தை ஏற்றுக்கொள்ளமுடியாமல் மனதிற்குள் வேதனைப்பட்டு வருகிறாள். ஆனால், இந்த வேதனையை புரிந்து கொள்ளாமல் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாக்கியாவை திட்டிதீர்த்து வருகின்றனர். கோபியின் அப்பாவும், எழிலும் மட்டுமே அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இனியா ஸ்கூல் பீஸ், கரண்ட் பில் என ஒட்டுமொத்த குடும்ப சுமையும் இப்போது பாக்கியாவின் தலையில் விழுந்துள்ளது.

தலையில் சுமை

தலையில் சுமை

இதையடுத்து, நேற்றைய எபிசோடில், ஈபி பில் கணக்கெடுக்க ஆள் வருகிறார் அவர் 17,000 கரண்ட் பில் வந்திருப்பதாக கூற பாக்யா அதிர்ச்சி அடைகிறாள். என்ன சொல்றீங்க 17 ஆயிரமா என பெருமூச்சு விடுகிறார். உடனே ஈஸ்வரி, கோபி இருந்திருந்தால் இதையெல்லாம் அவனே பார்த்திருப்பான் ஈஸ்வரி மற்றும் செழியன் இருவரும் சேர்ந்து கொண்டு பாக்யாவை திட்டித்தீர்க்கின்றனர்.

பணம் தான் காரணம்

பணம் தான் காரணம்

இதையடுத்து, செழியனின் ரூமுக்குள் சென்று நீ பண்ணது சரியா என ஜெனி கேட்க நான் பண்ணது சரிதான். வழக்கமா இந்த வீட்டுக்கு எவ்வளவு காசு தருவேனோ அதை மட்டும் தான் கொடுப்பேன் என்று கறாராக சொல்லி விடுகிறார். இதையடுத்து, பாக்கியம் எல்லாத்துக்கும் பணம் தான் காரணம் பணம் இருந்தால் எல்லா பிரச்சினைகளையும் சரி செய்து விடலாம் என்று. பெரிய தொலைக்காட்சி நடத்தும் சமையல் போட்டியில் கலந்து கொள்கிறாள்.

இந்த லட்சணத்துல சவால் வேற

இந்த லட்சணத்துல சவால் வேற

இந்த எபிசோடை பார்த்த ரசிகர்கள், என்ன பாக்யா, 17 ஆயிரமானு கேக்குற, மாசா மாசம் கரண்ட் பில் எவ்வளவு வரும்னு தெரியாம இத்தனை வருஷமா குடும்பம் நடத்தி இருக்க. இந்த லட்சணத்துல கோபிக்கிட்ட சவால் வேற, என பாக்யாவை பங்கமாக கிண்டலடித்துள்ளார் ஒரு ரசிகர். இவர் சொல்றது எல்லாம் சரிதான், ஏன்னு கேட்டா இந்த பொண்ணுக்கு உலகமே தெரியாதுனு சொல்லுவாங்க நமக்கு எதுக்குப்பா வம்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X