மீராவுக்கு லூசு பட்டம் கட்டிவிட்டு நல்லவள் போல் அழுத சாக்ஷி.. குறும்படம் போடுவாரா கமல்?
சென்னை: மீரா கேட்காத மீட்டிங்கை ஏற்பாடு செய்துவிட்டு அவர் கேட்டதால்தான் மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்தேன் என்று கூறிய சாக்ஷி நல்லவர் போல் அழுதது ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாக்ஷி, சிரித்து சிரித்து நல்லவர் போல் நடித்து அனைவரையும் ஏமாற்றி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணமே சாக்ஷிதான்.
மீரா பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதலே சாக்ஷிக்கு பிடிக்கவில்லை. கிடைக்கும் கேப்பில் எல்லாம் அவரை கேங்காக சேர்ந்து டார்கெட் செய்து வந்தனர்.

சண்டை மூட்டிவிட்ட சாக்ஷி
முகெனும் மீராவும் பேசிக்கொண்டிருந்ததை அரைகுறையாக கேட்ட சாக்ஷி, மீரா முகெனைன அபிராமியிடம் பேசக்கூடாது என சொல்கிறாள் என்று கூறி பெரிய பிரச்சனையை உருவாக்கினார். அப்போதே கமல் ஓரு குறும்படம் போட்டு சாக்ஷியின் முகத்திரையை கிழிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

மீராவை டார்கெட் செய்யும் சாக்ஷி
ஆனால் கமல் குறும்படம் போடாமல் வார்த்தையாக கேட்டுவிட்டு பெரும்போக்காக விட்டுவிட்டார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கை சாண்டியும் மீராவும் இணைந்து செய்தனர். ஆனால் மீராவால்தான் லேட் ஆகிவிட்டது என கவின் குற்றம்சாட்டினார்.

மீட்டிங் ஏற்பாடு செய்கிறேன்
இதனால் வருத்தப்பட்டார் மீரா. அதற்காக கவினும் மன்னிப்பு கேட்டார். இந்த விவகாரத்தில் வீட்டின் கேப்டன் என்ற முறையில் தலையிட்ட சாக்ஷி, நான் ஹவுஸ்மேட்ஸ்களுடன் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்கிறேன் அங்கு வந்து பேசு என மீராவிடம் கூறினார் சாக்ஷி.

லூசு பட்டம்
ஏற்கனவே கவின் மன்னிப்பு கேட்டுவிட்டதால் இந்த மீட்டிங் எதற்கு என மீராவிடம் வருத்தப்பட்டார் கவின். ஆனால் நான் மீட்டிங் கேட்கவில்லை, சாக்ஷிதான் ஏற்பாடு செய்தார் என்றார். அதனை கேட்ட சாக்ஷி, நீ லூசா? இல்லை லூசு மாதிரி நடிக்கிறீயா என கேட்டு பீதியை கிளப்பினார்.

மீரா பேச்சு எடுபடவில்லை
நீ கேட்டதால்தான் நான் மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்தேன் என்று பிளேட்டை மாற்றி மீரா மீது பழி போட்டார். கடைசி வரை வாதாடியும் மீரா பேச்சு எடுபடவில்லை. காரணம், ரேஷ்மா, ஷெரின் ஆகியோர் மீராதான் மீட்டிங் கேட்டார் என்று சாக்ஷிக்கு ஆதரவாக பேசினர்.

செம சீன் போட் சாக்ஷி
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஜெயிலில் இருந்த சாக்ஷியிடம் மீரா இந்த விவகாரம் குறித்து டிஸ்கஸ் செய்தார். அப்போது முதலில் அவருடன் ஆர்க்யூ செய்தார் சாக்ஷி, பின்னர் சிரித்தார். அதைத்தொடர்ந்து அப்படியே அழுது, செம சீனை கிரியேட் செய்தார்.

குறும்படம் வேண்டும்
உடனே அவருக்கு மொத்த ஹவுஸ் மேட்ஸும் ஆறுதல் கூறினர். எல்லோரிடம் ஒரே மாதிரியாக நடந்து கொண்ட லாஸ்லியாவும் சாக்ஷிக்கு ஆதரவாக மீராவை மட்டம் தட்டி பேசினார். இனியாவது கமல், தயவு தாட்சம் பார்க்காமல் குறும்படம் போட்டு சாக்ஷியின் முகத்திரையை கிழிக்கவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











