twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Bigg Boss 3 அய்யய்யோ யாராவது லாஸ்லியாவை காப்பாத்துங்க: கதறும் ரசிகர்கள்

    By Siva
    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil : Day 16 : Promo 1: கவினுக்கும் லொஸ்க்கும் காதலா?- வீடியோ

    சென்னை: லாஸ்லியா கவினுக்கு கஷ்டமான டாஸ்க் கொடுக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

    பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவின் அனைத்து பெண்களுடனும் கடலை போட்டாலும் சாக்ஷி அகர்வாலை காதலிப்பது போன்று நடித்தார். தற்போது சாக்ஷியை கழற்றிவிட்டுவிட்டு லாஸ்லியா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.

    இந்நிலையில் லாஸ்லியா கவினுக்கு ஒரு டாஸ்க் கொடுத்து சோதிக்கிறார்.

    பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டன் இவர்தான்.. முதல் நாளே அமர்க்களம்.. இன்னும் என்னல்லாம் இருக்கோ? பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டன் இவர்தான்.. முதல் நாளே அமர்க்களம்.. இன்னும் என்னல்லாம் இருக்கோ?

    லாஸ்லியா

    லாஸ்லியா கவினிடம் ஒரு நாள் முழுக்க நீ என் முகத்தை பார்க்கக் கூடாது, நானே பார்த்தாலும் நீ பார்க்கக் கூடாது அது தான் டாஸ்க் என்று கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. நாள் முழுக்க வச்ச கண் வாங்காமல் வேண்டுமானால் பார்க்கிறேன் ஆனால் இது வேண்டாம் என்று கவின் கெஞ்சுகிறார்.

    பல்ட்டி

    லாஸ்லியாவுக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஆதரவு இருப்பது தெரிந்த உடன் தான் கவின் சாக்ஷியிடம் இருந்து தள்ளியிருப்பதாகக் கூறி மீம்ஸ் போடுகிறார்கள். கவின் தள்ளித் தள்ளிப் போனாலும் சாக்ஷிக்கு இன்னும் அவர் மீது ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது.

    சீரியல்

    கவின் பிக் பாஸ் வீட்டில் இருப்பதை மறந்துவிட்டு இன்னும் சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள். அது என்னமோ உண்மை தான். ஒரு மெகா சீரியல் போன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வேலை சீரியல் இயக்குநர் தான் இதற்கு ஸ்க்ரிப்ட் எழுதியிருப்பாரோ?

    காப்பாத்துங்க

    கவினிடம் இருந்து யாராவது லாஸ்லியாவை காப்பாற்றுங்கள். இல்லை என்றால் அபிராமி, சாக்ஷி போன்று லாஸ்லியாவையும் அழ வைத்துவிடுவார் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த கையோடு கவின் மீது காதல் என்று தெரிவித்தது அபிராமி தான். ஆனால் கவின் சாக்ஷி அகர்வாலுடன் சேர்ந்து கொண்டு அபிராமியை கடுப்பேற்றினார். தற்போது லாஸ்லியாவுடன் ஜாலியாகப் பேசி சாக்ஷியை கோபப்பட வைக்கிறார் கவின். அடுத்து யார் கூட கவின் ஜோடி சேரப் போகிறீர்கள்?

    English summary
    Bigg Boss 3 contestant Losliya has given a tough task to Kavin. Will he do it?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X