பொம்மலாட்டம்.. தெருக்கூத்து.. ட்ராக் மாறும் பிக்பாஸ்! ரசிகர்கள் என்ன சொல்றாங்க?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மலாட்டம், தெருக்கூத்து என ட்ராக் மாறியிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே காதல், சண்டை என்பதை வைத்தே ஓட்டி வந்தனர். முக்கோண காதல், நாற்கோண காதல் என விதவிதமாக ஓட்டி வந்தனர்.
அது போரடிக்கவே வனிதாவை வைல்டு கார்டு என்ட்ரியாக்கி சண்டையை மூட்டி விட்டு குளிர்காய்ந்தனர். இந்நிலையில் புதிய ட்ராக் மாற்றியுள்ளார் பிக்பாஸ்.

தெருக்கூத்து
அதாவது பொம்மலாட்டம், தெருக்கூத்து என பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் அவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். நாடக்கலை, பொம்மலாட்டம்உள்ளிட்ட கிராமிய கலைகளின் ஆர்வலர் வல்லுநர் காளிஸ்வரன் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இந்த கலையை பயிற்றுவிக்கிறார்.

ரசிகர்கள் வரவேற்பு
நேற்று பொம்மலாட்டம்குறித்து பயிற்றுவிக்கப்பட்ட நிலையில் இன்று தெருக்கூத்து குறித்து பயிற்றுவிக்கப்படுவதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கமான காதல் ட்ராக்கில் இருந்து மாறியிருப்பதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வசதியா இருக்கும்
தொடர்ந்து இப்படி ஏதாவது நல்லதா பண்ணுங்கய்யா
பார்க்கவும் ஆர்வம் இருக்கும்
நடிகர், ஆக ஆசை படறவங்களுக்கும், அவங்க திறமையை காட்ட வசதியா இருக்கும் என்று கூறுகிறார் இவர்.
சாண்டி வேஷம்
சாண்டி வேஷம் செம.. தர்ஷன ஆவ்சம்.. செம மாஸா இருக்கு பார்க்க. முகென் லுக்.. சேரன் பர்ஃபாமன்ஸ்.. வனிதா எஃபோர்ட்.. இன்று இரவு இந்த மண்வாசத்தை காண காத்திருக்கிறோம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஏமாற்றம்
நாட்டுப்புற கலை விஷயம் சூப்பர்.. ஆனா கடைசி 30 நாள்ல கஷ்டமான டாஸ்க் குடுப்பாங்கனு எதிர்பாக்குற எங்களுக்கு இது ஏமாற்றம் தான்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அறிவோம்
இங்கு பயிற்சி கொடுக்கப்பட்டு, மக்களிடையே இந்த கலைகளின் பெருமையை எடுத்துரைக்கவே இந்த முயற்சி...
இன்றைய திரை நிழல் நடிகர்கள் பின்னால் செல்லும் நாம், அன்றாடம் கஷ்டப்படும் இந்த கலைஞர்களை பற்றியும் அறிவோம்.. என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











