வாவ்.. போன வாரத்தோடு பார்க்கும் போது இந்த வாரம் 10 வயசு குறைஞ்சு போச்சே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நடிகர் கமல்ஹாசனை பார்த்த ரசிகர்கள் பிரமித்து போயுள்ளனர்.
இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கவுள்ளார். கடந்த வாரம் குறும்படம் போட்டு மீரா மிதுனின் முகத்திரையை கிழித்தவர் இந்த வாரம் என்ன செய்யப்போகிறாரோ என்று யோசிக்கின்றனர் பார்வையாளர்கள்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசன் மீசையில்லாமல் மொழு மொழுவென க்ளீன் ஷேவ் செய்து சும்மா டக்கராக வந்துள்ளார். இன்று வெளியான புரமோவை பார்த்த ரசிகர்கள், இளமையாக காட்சியளிக்கும் கமலை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

இந்தியன் 2 படம்
ஒரு வாரத்தில் கமல்ஹாசனுக்கு பத்து வயசு குறைந்து போச்சே என்று பிரமிப்புடன் கூறி வருகின்றனர். இந்தியன் படத்தில் வந்த கமலை மீண்டும் பார்க்க முடிகிறது என்று கூறியுள்ள ரசிகர்கள், இந்தியன் 2 படத்திற்கான கெட்டப்பா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

வயதே தெரியவில்லை
போன வாரத்தில் முறுக்கு மீசையுடன் வந்த கமல் அவ்வப்போது மீசையை முறுக்கி மிரட்டினார். இன்று வயதே தெரியாத அளவுக்கு இளமையாக காணப்படுகிறார் கமல்.
புதிய கெட்டப்
இந்தியன் 2 படத்துக்காக மீசையை எடுத்து இந்த கெட்டப் சேஞ்ன்னு நினைக்கிறேன் என்கிறார் இந்த ரசிகர்.
வேற லெவல்
கமலின் புதிய கெட்டப்பை பார்த்து தலைவா வேற லெவல்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
செம மாஸ் லுக்
சால் செம மாஸ் லுக்.. மற்ற கழிசடைகளை பற்றி அப்புறம் பேசலாம்! என்று கூறுகிறார் இவர்.
கமல் சார் எப்படி இப்படி?
கமல் சார் எப்படி அழகா மெயின்டைன் பண்றீங்க என்கிறார் இந்த நெட்டிசன்.
வயசே குறைஞ்சுடுச்சு
இப்படி க்ளீன் ஷேவ் செய்த கெட்டப்பில் கமல்ஹாசனுக்கு பத்து வயது குறைந்தது போல் தெரிகிறது என்கிறார் இந்த நெட்டிசன்.
இந்தியன் 2 தொடங்கியிருச்சு
கமலின் இந்த கெட்டப்பை பார்த்த இவர் இந்தியன் பார்ட் 2 தொடங்கிருச்சு என்கிறார்.


Click it and Unblock the Notifications











